- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, Side Dish
உருளைக்கிழங்கு வைத்து உருளைக்கிழங்கு குருமா, உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு கூட்டு அப்படின்னு உருளைக்கிழங்கு வச்சு நிறைய ரெசிபி செஞ்சுருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை உருளைக்கிழங்கு வச்சு பொட்டேட்டோ கபாப் ரெசிப்பி செஞ்சு பாருங்க. சிக்கன் கபாப் செஞ்சுருப்பீங்க ஆனா இந்த பொட்டேட்டோ கபாப் ரொம்ப ரொம்ப சிம்பிளா சூப்பரா செய்யலாம். ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்களா அவங்களுக்கு இந்த பொட்டேட்டோ கபாப் செஞ்சு கொடுங்க டீ காபியுடன் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும்.
உருளைக்கிழங்கு பொதுவா எல்லாருடைய வீட்டிலேயும் இருக்கும் அதனால உருளைக்கிழங்கு வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க. உருளைக்கிழங்கு வச்சு கட்லெட் கூட செஞ்சு இருப்பீங்க ஆனா இது கொஞ்சம் வித்தியாசமான சுவைல ரொம்பவே அருமையா இருக்கும். இந்த டேஸ்டான பொட்டேட்டோ கபாப் ரெசிபியை வெஜிடபிள் பிரியாணி தயிர் சாதம், ரசம் சாதம் எல்லாத்துக்குமே சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கெல்லாம் அட்டகாசமா இருக்கும் சாம்பார் சாதத்துக்கும் சூப்பரா இருக்கும். ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சுவையான பொட்டேட்டோ கபாப் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி
Ingredients
Method
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்த ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் கரம் மசாலா சாட் மசாலா மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சீரகம் அரிசி மாவு கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பொட்டேட்டோ கபாப் தயார்.






