- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் உருளைக்கிழங்கு பாப்கார்ன் செய்து கொடுங்கள். இந்த உருளைக்கிழங்கு பாப்கார்ன் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ்.
இந்த உருளைக்கிழங்கு பாப்கார்ன் நன்கு மொறுமொறுவென்று இருப்பதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும். அதுவும் மாலை நேரத்தில் இப்படியான ஸ்நாக்ஸை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் போட்டி போட்டு காலி செய்வார்கள். குறிப்பாக இந்த உருளைக்கிழங்கு பாப்கார்ன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை செய்ய குறைவான பொருட்களே போதுமானது. இதுவரை உருளைக்கிழங்கு வைத்து சாதம், வறுவல், ரோஸ்ட் அப்படின்னு நிறைய ரெசிபி செய்திருப்பீர்கள்.
ஆனால் எப்போதும் இதே போல் செய்து சாப்பிடாமல் ஒரு தடவை குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு பாப்கார்ன் செய்து கொடுத்து பாருங்கள். ஒரே ஒரு தடவை இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்கள் கண்டிப்பா அவ்ளோ ருசியாக இருக்கும். அதேசமயம் மாலை வேளையில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட இந்த ரெசிபி ரொம்ப ருசியா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட அவங்களுக்கும் இந்த சூப்பரான ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் சட்டுன்னு செய்து முடித்து விடலாம். இப்போது சுவையான உருளைக்கிழங்கு பாப்கார்ன் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அவல் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பூண்டு, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம் அரைத்து விழுது மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து விடவும் இது சட்டியில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் செய்து வைத்துள்ள கலவையை சிறிதளவு எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு, காஷ்மீர் மிளகாய் தூள், சாட் மசாலா, ஆரிகானோ, ட்ரை மாங்கோ பவுடர், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பாப்கார்ன் தயார்.






