பிரான் கிரிஸ்பி பிரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க!!

prawn pakoda
- Advertisement -

என்னதான் சிக்கன் மட்டன் இருந்தாலும் ஒரு சிலர் இறால் பிரியர்களா இருப்பாங்க. அந்த மாதிரி இறால் ரொம்ப பிடிச்சவங்களுக்கு இறால் கிரேவி இறால் சுக்கா பட்டர் கார்லிக் இறால் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு கொடுத்திருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை நல்லா கிறிஸ்ப்பியா மொறு மொறுன்னு பிரான் கிரிஸ்பி ஃபிரை செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும். முட்டையில நல்லா முக்கி எடுத்து பிரட் கிரம்ஸ்ல பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுக்கும்போது அவ்வளவு ருசியா இருக்கும். உள்ள சாப்டா வெளியில நல்லா கிரிஸ்பியா சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். இத சைடு டிஷ்ஷா மட்டும் இல்லாம அப்படியே ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிடலாம்.

-விளம்பரம்-

மாலை நேரத்தில் ஈவினிங் ஸ்னாக்ஸாக கூட இதை சாப்பிடலாம். அவ்ளோ டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான சுவையான பிரான் கிரிஸ்பி ஃப்ரை கண்டிப்பாக வீட்ல செஞ்சு சாப்பிட வேண்டிய ஒரு டிஷ். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க இத செஞ்சு கொடுக்கலாம். இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சைச்சாறு சேர்த்து நல்லா கலந்து ஊறவெச்சிட்டு அதுக்கு அப்புறமா மைதா மாவு கோட்டிங் கொடுத்துட்டு முட்டையில முக்கு எடுத்து பிரட் கிரம்ஸ்ல பிரட்டி எடுத்து பொரிச்செடுக்கும் போது அவ்ளோ மொறு மொறுன்னு இருக்கும்.

- Advertisement -

எப்பவுமே இறால் எடுத்தா ஒரே மாதிரி ரெசிப்பீஸ் செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா கண்டிப்பா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. பொதுவாவே குழந்தைகளுக்கு இந்த மாதிரி பொரிச்ச ஐட்டம் ரொம்ப பிடிக்கும் அதனால எப்பவாவது ஒரு தடவை இந்த மாதிரி குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரிச்ச ரெசிபிஸ் செஞ்சு கொடுத்து பாருங்க. ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க காரணம் இந்த ரெசிபி ரொம்பவே ருசியா இருக்கும். வாங்க இந்த கிரிஸ்பியான பிரான் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

prawn pakoda
Print
No ratings yet

பிரான் கிரிஸ்பி பிரை | Prawn Crisp Fry Recipe In Tamil

என்னதான் சிக்கன் மட்டன் இருந்தாலும் ஒரு சிலர் இறால் பிரியர்களா இருப்பாங்க. அந்த மாதிரி இறால் ரொம்ப பிடிச்சவங்களுக்கு இறால் கிரேவி இறால் சுக்கா பட்டர் கார்லிக் இறால் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு கொடுத்திருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை நல்லா கிறிஸ்ப்பியா மொறு மொறுன்னு பிரான் கிரிஸ்பி ஃபிரை செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும். முட்டையில நல்லா முக்கி எடுத்து பிரட் கிரம்ஸ்ல பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுக்கும்போது அவ்வளவு ருசியா இருக்கும். உள்ள சாப்டா வெளியில நல்லா கிரிஸ்பியா சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். இத சைடு டிஷ்ஷா மட்டும் இல்லாம அப்படியே ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஈவினிங் ஸ்னாக்ஸாக கூட இதை சாப்பிடலாம். அவ்ளோ டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான சுவையான பிரான் கிரிஸ்பி ஃப்ரை கண்டிப்பாக வீட்ல செஞ்சு சாப்பிட வேண்டிய ஒரு டிஷ்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish, snacks
Cuisine: Indian
Keyword: Prawn Crisp Fry
Yield: 4 People
Calories: 184kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி இறால்
  • 3 டேபிள் ஸ்பூன் பிரெட் க்ராம்ஸ்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கப் மைதா மாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 முட்டை

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் இறாலை கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும் அதில் எலுமிச்சைச் சாறு இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு தட்டில் மைதா மாவு மிளகுத்தூள் சீரகத்தூள், கரம் மசாலா மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்த இறாலை இந்த கலவையில் பிரட்டி எடுத்து முட்டையில் முக்கி எடுத்து பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரான் கிரிஸ்பி ஃப்ரை தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 184kcal | Carbohydrates: 2.8g | Protein: 19.4g | Fat: 4.9g | Sodium: 137mg | Potassium: 267mg | Vitamin A: 80IU | Vitamin C: 177mg | Calcium: 39mg | Iron: 25mg

இதனையும் படியுங்கள் : பட்டர் கார்லிக் பிரான் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!