- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- LUNCH
முட்டை சேர்த்து பல வகையான சமையல்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முட்டை இறால் பயன்படுத்தி பொடிமாஸ் செய்யலாம் .கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது, இதன் சுவை எப்படி இருக்கும் என்றும் தோன்றும். முட்டை இறால் வைத்து செய்யும் இந்த பொடிமாஸ் மிகவும் அருமையாகவே இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Ingredients
Method
முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம்ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.சுவையான இறால் முட்டை பொடிமாஸ் தயார்.






