வித்தியாசமான எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த இறால் பொடிமாஸை, உங்கள் வீட்டில் செய்து கொடுத்து அசத்துங்கள்!!

- Advertisement -

முட்டை பொடிமாஸ் கேள்விப்பட்டு இருப்போம் அதனை இறால் பொடிமாஸ் அப்படின்னு சந்தேகமா இருக்கா? முட்டை பொடிமாஸ் மாதிரியே ரொம்பவே ஒரு சூப்பரான டிஷ் தான் இந்த இறால் பொடிமாஸ். இறால் எடுத்தா இறால்ல கிரேவி இறால்ல குழம்பு இறால் சில்லி இறால் ரோஸ்ட் இருந்தா செஞ்சிருப்போம் ஆனா நம்ம யாருமே இறால் பொடிமாஸ் செஞ்சிருக்கவே மாட்டோம்.

-விளம்பரம்-

சில குழந்தைகளுக்கு இறால் பிடிக்காது அவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி முட்டை பொடிமாஸ்னு சொல்லி ஏமாத்தி இறால் பொடி மாச கொடுக்கலாம் ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட. இதோட சுவையும் முட்டை பொடிமாஸ் விட சூப்பராவே இருக்கும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் உங்க வீட்டுல இருக்குற பெரியவங்களுக்கும் இந்த இறால் பொடிமாஸ் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

இறால்ல பொடிமாஸ் செய்யணும் அப்படினா நிறைய பொருட்கள் தேவைப்படும் நிறைய நேரம் ஆகும்னு கவலைப்பட தேவையில்லை ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து கம்மியான நேரத்திலேயே நம்ம இந்த இறால் பொடிமாஸ் செஞ்சு முடிச்சிடலாம். உங்க வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி இறால் பொடிமா செஞ்சு கொடுத்தீங்கன்னா உங்களோட சமையலுக்கு அவங்க அடிமையாகிடுவாங்க.

அந்த அளவுக்கு இந்த இறால் பொடிமாஸ் ரொம்பவே சுவையா இருக்கும். சுவையா மட்டும் இல்லாம இந்த இறால் நம்ம சாப்பிடறதால நம்ம இதயத்துக்கு மூளைக்கு எலும்புகள் ஆரோக்கியத்துக்கு பல வகைல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாம இறால் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதனால கண்டிப்பா நம்ம இந்த இறால மாசத்துல ரெண்டு தடவையாவது சாப்பிடலாம். வித்தியாசமான இறால் வச்சு செய்யக்கூடிய இந்த இறால் பொடிமாஸ் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

இறால் பொடிமாஸ் | Prawn Podimas Recipe In Tamil

இறால்ல பொடிமாஸ் செய்யணும் அப்படினா நிறைய பொருட்கள் தேவைப்படும் நிறைய நேரம் ஆகும்னு கவலைப்பட தேவையில்லை ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து கம்மியான நேரத்திலேயே நம்ம இந்த இறால் பொடிமாஸ் செஞ்சு முடிச்சிடலாம். உங்க வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் கொஞ்சம் வித்தியாசமாஇந்த மாதிரி இறால் பொடிமா செஞ்சு கொடுத்தீங்கன்னா உங்களோட சமையலுக்கு அவங்க அடிமையாகிடுவாங்க. இறால் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதனால கண்டிப்பா நம்ம இந்த இறால மாசத்துல ரெண்டு தடவையாவது சாப்பிடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish, starters
Cuisine: tamil nadu
Keyword: Prawn Podimas
Yield: 4
Calories: 371kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ இறால்
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 பச்சைமிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இறாலில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வேகவைத்து எடுத்து வைத்துள்ள இறாலை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு நறுக்கி வைத்துள்ள இறாலை அதனுடன் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  • இறால் பொடிமாஸ் பதத்திற்கு அனைத்துடனும் சேர்ந்து கலந்த பிறகு கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான இறால் பொடிமாஸ் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g | Vitamin A: 12IU

இதையும் படியுங்கள் : கமகமனு  பட்டர் இறால் முட்டை மசாலா இதே முறையில் அப்படி செய்து பாருங்களேன்! சாப்பிட சாப்பிட நாவில் எச்சி ஊறும்!

-விளம்பரம்-