- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து கிரேவி, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம்.
இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் இறால் முள்ளங்கி மசாலா இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். சிக்கன், மட்டன் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வார இறுதியில் இறால் வாங்கி குழம்பு வையுங்கள். இந்த இறால் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இந்த இறால் முள்ளங்கி மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பானது இறால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடும் வகையில் இருக்கும். இறால் குழம்பு சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு சூப்பரான அசைவ உணவாகும். இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான இறால் தீயல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! உடலுக்கு ஆரோக்கியம் தரும் சூப்பர் அசைவ ரெசிபி உங்களுக்காக.
Ingredients
Method
முதலில் இறாலை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதன்பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் முள்ளங்கி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின் ஊற வைத்துள்ள இறால் சேர்த்து கலந்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
இறால் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான இறால் முள்ளங்கி மசாலா தயார்.






