இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் அப்படின்னு எக்கச்சக்கமான டிபன் வகைகள் இருந்தாலும் நிறைய பேரோட வீடுகளில் அடிக்கடி செய்றதுனா அது இட்லியும் தோசையும் தான்.அந்த இட்லி தோசைலயே கொஞ்சம் வித்தியாசமா இருந்தா நல்லா இருக்கும் அப்டின்னு தோணும்.அந்த வகையில் மசாலா தோசை வெங்காய தோசை முட்டை தோசை அப்படின்னு தோசை வெரைட்டி எக்கச் சக்கமா இருக்கு. அதே மாதிரி இட்லியிலும் மசாலா இட்லி, ரவா இட்லி, வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி,கறி இட்லி ,தட்டு இட்லி அப்படின்னு நிறைய இட்லி வெரைட்டீஸ் இருக்கு.
அந்த வகையில இன்னைக்கு நம்ம ஹைதராபாத்தில் ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடிய ஸ்பாட் இட்லிலேயே இறால் வச்சு செய்யக்கூடிய இறால் ஸ்பாட் இட்லி தான் பார்க்க போறோம். இறால் சாப்பிட பிடிக்காதுன்னு சொல்றவங்களுக்கு இந்த இறால் ஸ்பாட் இட்லியா செஞ்சு கொடுங்க சாப்பிட்டு அசந்து போயிடுவாங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும் இந்த இறால் ஸ்பாட் இட்லிக்கு சைட் டிஷ் தேவைப்படாது அந்த அளவுக்கு ருசியா இருக்கும் அப்படியே எடுத்து சாப்பிடலாம் உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கும் இந்த இறால் ஸ்பாட் இட்லிய கொடுத்து விடலாம். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான இறால் ஸ்பாட் இட்லி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இறால் ஸ்பாட் இட்லி | Prawn Spot Idly Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கி இறால்
- 1 கப் இட்லி மாவு
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து லேசாக வதக்கியதும் தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் சோம்பு தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக கழுவிய இறாலையும் சேர்த்து வதக்கி மூடி போட்டு மூடி எண்ணெயிலேயே நன்றாக வேக வைக்கவும்.
- அனைத்தும் நன்றாக வெந்த பிறகு அதனை மூன்றாக பிரித்து இட்லி மாவை இறால் தொக்கு மேல் ஊற்றி அடுத்தவிதமான தீயில் வைத்து நன்றாக இரு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான இறால் ஸ்பாட் இட்லி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இதுவரை இறால் வாங்கி எத்தனையோ ரெசிபிக்களை செய்திருப்பீர்கள் ஆனால் ஒருமுறை இந்த இறால் மிளகு பிரட்டல் செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!