ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மனசாட்சி, செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகின்றது. அதேபோல் புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி ஆவார். ஒருவரது ஜாதகத்தில் புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன. நாளை (செப்டம்பர் 24) புதன் தனது உச்ச ராசியான கன்னி ராசியில் சஞ்சரிக்கும்போது, புதாதித்ய யோகம் (Budhaditya Yoga) உருவாகிறது. கன்னி ராசியில் இந்த யோகம் ஏற்படுவதால் இரட்டிப்பு பலத்துடன் கூடிய புத்திர யோகமும் கிடைக்கும். இந்த யோகத்தின் காரணமாக சில ராசிக்காரர்கள் நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து முழு விடுதலை பெற உள்ளனர். இந்த ராசிக்காரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதோடு, நிதி நன்மையையும் பெறுவர். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கு பல சுப பலன்கள் மற்றும் அதீத ராஜயோகம் ஏற்படும். இதன் காரணமாக, எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படும். முக்கியமான, தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் நீண்ட கால நிதி பிரச்சனைகளும் தீரும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் வரும். இதன் மூலம் உங்கள் வருமானம் முன்பை விட அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தம் அல்லது முதலீட்டை பெறுவீர்கள். இது உங்கள் வணிக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
மிதுனம்

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி அடையும். அத்துடன் சமூக அந்தஸ்தும் உயரும். திருமண வாழ்க்கையில் இனிமை உண்டாகும், சமூகத்தில் மரியாதை கூடலாம், வேலையில் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஏற்ற நேரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம்

எதிர்பார்த்ததை விட பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சிரமமின்றி பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருவாய் தொடர்பான அனைத்து முயற்சியும் வெற்றியடையும். பிறருக்கு உதவும் நிலை ஏற்படும். முயற்சி செய்தால் உங்களுக்கு விருப்பமான, மேன்மையான வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியானதாவும் மாறும். திருமண வாழ்க்கையில் குதூகலம் அதிகரிக்கும். மனதை அலைக்கழித்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் காலமாக இருக்கும்.
கன்னி

இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த புத்தாதித்ய யோகம், அதீத ராஜயோகம் ஏற்படும். வேலையில் மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் முன்னுரிமை, நிதி ஆதாயம் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் காரணமாக, வியாபாரத்திலும் மிகப்பெரிய ஒப்பந்தத்தைப் பெறலாம். சிறப்பு நபரின் உதவியுடன் பெரிய திட்டத்தை முடிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும்.
விருச்சிகம்

வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வேறு வேலைக்கு மாற விரும்புபவர்களின் முயற்சி வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைத்து நிதி பிரச்சனைகளும் அழுத்தங்களும் பெருமளவு குறையும். முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம். இந்த காலகட்டத்தில், விருச்சிக ராசியினர் வேலையில் வெற்றி பெறுவார்கள். பண உதவி கிடைக்கலாம். வியாபாரத்தில் மிகப் பெரிய ஆர்டரை பெறலாம். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்.
தனுசு

உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல அங்கீகாரம் கிடைப்பதால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பொருளாதார நிலையும் முன்னேற்றம் அடையும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். ஊதிய உயர்வு என அடுத்தடுத்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். அதே சமயம் தொழிலதிபர்களுக்கும் நல்ல காலம்.
இதனையும் படியுங்கள் : புரட்டாசி மாதம் பிறந்தவுடன் ஜாக்பாட் அடிக்க போகும் நான்கு ராசிகள்!!


