- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening
தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். பொதுவாக நாம் மாலை வேளையில் சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளை தான் செய்து சாப்பிடுவது உண்டு. பொதுவாக இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
ஆனால் இதையே சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? சற்று வித்தியாசமாக சாப்பிட தோன்றுகிறதா அப்போது உங்கள் வீட்டில் முள்ளங்கி இருந்தால் அதைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி இருந்தால், அதைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள்.
இந்த கட்லெட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முள்ளங்கி உண்ணாத குழந்தைகளுக்கு இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். முள்ளங்கி வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இப்போது சுவையான முள்ளங்கி கட்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : முள்ளங்கி கோலா உருண்டை
Ingredients
Method
முதலில் முள்ளங்கியை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஓமம், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் இதனை சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி பின் தட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நாம் செய்து வைத்துள்ள கலவையை சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி கட்லெட் தயார்.






