- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சப்பாத்தி. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக முள்ளங்கி சேர்த்து செய்ய உள்ளோம்.
இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். முள்ளங்கி சப்பாத்தி என்றதும் பலர் அதன் வாசனையை நினைத்து முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த முள்ளங்கியை வதக்கி செய்வதால் வாசனை அதிகம் வராது. முள்ளங்கியில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. ஆனால் பெரும்பாலான வீடுகளில் முள்ளங்கி சமைப்பதை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் இது போன்ற சுவையில் முள்ளங்கியை சப்பாத்தி செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு வித்தியாசமான சைட் டிஷ் சாப்பிட ஆசைபடுகிறீர்களா? அப்படியானால் இந்த சில்லி கோபி ட்ரை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் முள்ளங்கியை தோல் சீவி விட்டு ஒரு கடாயில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வதக்கிய முள்ளங்கி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் கோதுமை மாவு, உப்பு, சில்லி ப்ளேக்ஸ், சீரகத்தூள், ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தயிர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசைந்து ஒரு ஈரத் துணியால் மூடி சிறிது நேரம் வைத்து விடவும்.
பின் மாவை சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும். இதேபோல் அனைத்து மாவையும் சப்பாத்தி தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தியை சேர்த்து சுற்றி வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி மசாலா சப்பாத்தி தயார்.






