ராகு கேது பெயர்ச்சியினால் மகாலட்சுமியின் அருள் பெற்று ராஜயோக ராசிக்கார்கள் இவர்கள் தான்!

- Advertisement -

நிழல் கிரகங்களான ராகுவும் வக்ர நிலையில் நகர கூடியவர்கள். அதாவது நட்சத்திரங்களின் மீது தழைகீழாக இடம்பெயர்வார்கள் அஸ்வினி பரணி கார்த்திகை என்று மற்ற கிரகங்கள் இடம் பெயர்ந்தால் ராகுவும் கேதுவும் கார்த்திகை ரோகிணி அஸ்வினி என்று பின் நோக்கி இடம் பெயர்வார்கள். அசுரராக இருந்து அமிர்தத்தை உண்டு. மோகினியாகிய திருமாலின் கரங்களினால் தலை துண்டிக்கப்பட்ட ராகுவாகவும் கேதுவாகவும் மாறி அனைவரது வாழ்விலும் மாற்றங்களையும் வளங்களையும் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள்.  ராகுவும் கேதுவும் மனிதனின் மனதிற்கு ஆசையை ஏற்படுத்திய அந்த ஆசையினால் திருப்தி இல்லாமல் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி அதை வெளிப்படுத்துவதற்கான தைரியம் இன்மை போன்றவற்றை கொடுப்பார்கள் . பேராசையை தூண்டி அவற்றிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பதற்கு ஏற்ப பலன்களை கொடுப்பார்கள். இவர்கள் மூதாதையர்கள் செய்த கர்ம வினைகளின் பலனை கொடுக்கக் கூடியவர்கள்.

-விளம்பரம்-

மற்ற கிரகங்கள் வக்கிர இயக்கத்தில் சில காலம் தான் இருப்பார்கள். ஆனால் இவர்கள் வக்ர நிலையில் தான் இடம் பெயர்ச்சி ஆவார்கள். அதாவது மற்ற கிரகங்கள் தலைகீழாக பின்னோக்கி சென்று மீண்டும் தான் இருந்த நிலைக்கு திரும்பும் ஆனால் ராகவும் கேதுவும் எப்பொழுதுமே வக்ர நிலையிலே தான் பெயர்ச்சி ஆவார்கள். தலைகீழாக பின்னோக்கி மட்டுமே ராசிகளுக்கு பெயர்ச்சி அடையும். ஒவ்வொரு முறை ராகு கேதுகளை வைத்து தான் நம் முன்னோர்களின் கர்மங்களை  கண்டுபிடிக்க இயலும். ஆகையால் ராகு தந்தை வழிகாரகன் என்றும் கேது தாய் வழிகாரகன் என்றும் அழைக்கப்படுகிறது. ராகுவும் கேதுவும் தோஷங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். ராகு கேதுகளை வைத்து தான் தாரதோஷம், களத்திர தோஷம்,  புத்திர தோஷம், பித்ரு தோஷம் போன்ற தோஷங்களை கணக்கிடுகிறார்கள். கல்வி, ஞானம், வருமானம் ,செல்வம் , வெளிநாடு வேலை வாய்ப்பு , கர்மம் போன்றவற்றை ராகு கேதுகளே முடிவு செய்கின்றன. அப்படிப்பட்ட ராகு கேதுகளின் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

மேஷ ராசி

ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது. ராகுவும் கேதுவும் இவர்களுக்கு கடினமாக உழைக்காமலேயே வெற்றியை கொடுக்க இருக்கிறார்கள். வெற்றி இவர்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். நிதி ஆதாயம் உண்டு. வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.  வெளியூர் சென்று வேலை செய்ய விருப்பப்படுபவர்களுக்கு புதிய வேலைகள் அமையும் நல்ல சலுகைகளும் கிடைக்கும்.

கடக ராசி

இந்த ராகு கேது பெயர்ச்சியினால் கடக ராசிக்காரர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.  இந்த நேரத்தில் சிரமமான பணிகளில் இருந்து ஓய்வு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும் . புகழ் உயரும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இந்த நேரத்தில் எதிர்பாராத நிதியாதாயம் கிடைக்கும்.

சிம்ம ராசி

இந்த ராகு கேது பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வணிக நிலைமை மாறும். மாணவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். பணவரவு ஏற்படும் உடல்ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு  கவனம் செலுத்தி குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுங்கள்.

-விளம்பரம்-

துலாம் ராசி

துலா ராசிக்காரர்களே இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலங்களை அள்ளித்தர காத்திருக்கிறது. மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையின் தனிமையாக நேரத்தை செலவிடுவது நல்லது. வேலைகளில் இருந்த தடங்கல்கள் அகலும். ஒரு நீண்ட நெடிய தூர பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. அந்த  பயணங்களால் நன்மைகள் கிடைக்கும்.

மீனம் ராசி

இந்த ராகு கேது பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் வாழ்வில் அனுகூலங்கள் அதிகமாக நடைபெறும் . இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடலாம். வேலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரலாம்.  புதிய முதலீடுகளில் பலன் கிடைக்கும். இந்த தீபாவளிக்கு முன் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.