கொய்யாப்பழ சட்னி கேக்குறதுக்கே கொஞ்சம் புதுமையானதா இருக்கும். ஆனா இந்த கொய்யாப்பழ சட்னிய ஒரு தடவ மட்டும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. புளிப்பு இனிப்பு காரம் அப்படின்னு மூன்று சுவைகளும் நிறைந்து இருக்கிற இந்த கொய்யாப்பழ சட்னி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு சிலருக்கு இந்த மாதிரி சாப்பிட சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு இந்த மாதிரி சாப்பிடுவதற்கு அவ்வளவு பிடிக்கும். அந்த மாதிரி இந்த மூன்று சுவைகளையும் சேர்த்து சாப்பிட பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த சட்னியை கொய்யாப்பழம் கிடைக்கும்போது செஞ்சு பாருங்க.
கொய்யாப்பழம் நிறைய ஆரோக்கியமான பழங்களில் ஒன்று. இதுல வைட்டமின் சி அதிகமா இருக்கு அதனால சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிடணும். அப்படி கொய்யாப்பழத்தை அடிக்கடி அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க அதுல உப்பு மிளகாய் தூள் வச்சு சாப்பிடுவீங்க. ஆனா அப்படி சாப்பிடவும் பிடிக்கலன்னா இந்த மாதிரி ராஜஸ்தான் ஸ்பெஷல் சட்னியான கொய்யாப்பழ சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த கொய்யாப்பழ சட்னி தோசை இட்லி கூட சூப்பரா இருக்கும் சப்பாத்தி பூரிக்கு கூட நல்லா இருக்கும்.
வெண்பொங்கல் வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா கூட இதை வைத்து சாப்பிடலாம் ஒரு தடவை சாப்பிட்டு பாத்தீங்கன்னா, கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். தேங்காய் சட்னி தக்காளி சட்னி பூண்டு சட்னி, காரச் சட்னி மல்லி சட்னி, புதினா சட்னி நிறைய சட்னி சாப்பிட்டிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை கொய்யாப்பழத்தில் சட்னி செஞ்சு மட்டும் சாப்பிட்டு பாருங்க அதுக்கு அப்புறமா அடிக்கடி இதை செஞ்சு சாப்பிடுவீங்க. சுவையான இந்த சட்னி ரெசிபி செய்றதுக்கு எந்த பொருட்களையும் வதக்க தேவையில்லை எண்ணெய் கூட தேவையில்லை.
ரொம்ப சிம்பிளா ஒரு நாலஞ்சு பொருட்கள வச்சு செஞ்சு முடிச்சிடலாம். மிக்ஸி ஜார் மட்டும் இருந்தா போதும். இந்த சட்னி செய்யறதுக்கு கொய்யாப்பழம் நல்லா பழுத்திருக்கணும். அப்பதான் சட்னி ரொம்ப டேஸ்டா இருக்கும். சுவையான இந்த சட்னி ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு தோசைக்கும் இட்லிக்கும் சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க. அவ்ளோ டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த ராஜஸ்தான் ஸ்பெஷல் கொய்யாப்பழ சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ராஜஸ்தான் கொய்யா சட்னி | Rajasthan Guava Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கொய்யாப்பழம்
- 5 காஷ்மீர் மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை
செய்முறை
- மிக்ஸி ஜாரில் காஷ்மீரி மிளகாய் சீரகம் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு பழுத்த கொய்யா பழத்தை நறுக்கி சேர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான கொய்யாப்பழச் சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ராஜஸ்தானி பூண்டு சட்னி சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா ஒரு தடவ செஞ்சு பாருங்க!