ராஜஸ்தானி பூண்டு சட்னி சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா ஒரு தடவ செஞ்சு பாருங்க!

- Advertisement -

என்னதான் தக்காளி சட்னி தேங்காய் சட்னி சாம்பார் அப்படின்னு விதவிதமா இட்லி தோசைக்கு சட்னி செஞ்சாலும் டக்குனு ஒன் மினிட்ல செய்யக்கூடிய பூண்டு சட்னி நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும். இப்ப இருக்கிற இந்த அவசர உலகத்துல எல்லாருமே சட்டு சட்டுனு வேலைய முடிக்கணும் அப்படின்னு தான் நினைப்போம். அப்படி ரொம்பவே ஈசியா டக்குனு செய்யக்கூடிய ராஜஸ்தானி ஸ்பெஷல் பூண்டு சட்னி தான் இப்ப பார்க்க போறோம். இந்த ராஜஸ்தானி ஸ்பெஷல் பூண்டு சட்னியா இட்லி தோசை சாதம் சப்பாத்தி எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த பூண்டு சட்னியை செய்றதுக்கு நம்ம அரைக்க தேவையில்லை வதக்க தேவையில்லை பூண்டை இடிச்சு அது கூட சில பொடிகள் மட்டும் சேர்த்து பத்து நிமிஷம் கொதிக்க வச்சா போதும் சூப்பரான ராஜஸ்தானி ஸ்பெஷல் பூண்டு சட்னி தயாராகிவிடும். இந்த பூண்டு சட்னியை நீங்க நாலஞ்சு நாளைக்கு ஸ்டோர் பண்ணி கூட வச்சு சாப்பிடலாம். கொஞ்சம் எண்ணெய் அதிகமா சேர்த்துக்கிட்டா போதும் நாள் வரைக்கும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். குழந்தைகளுக்கு கொஞ்சம் காரம் கம்மியா சேர்த்து இதை கொடுக்கலாம்.

- Advertisement -

பெரியவங்களுக்கு காரம் சாப்பிட பிடிக்கும் நான் இந்த பூண்டு சட்னி அவங்களுக்கு ரொம்ப ரொம்ப விருப்பமான ஒரு சட்னியாகவே மாறிடும். உங்க வீட்டில் நீங்களும் ஒரு நாள் இந்த சூப்பரான பூண்டு சட்னியை செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் அடிக்கடி இதை செய்வீங்க. பூண்டு உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதனால அடிக்கடி சேர்த்துக்கோங்க. பூண்டை பச்சையா சேர்த்துக்க பிடிக்காதவங்க இந்த மாதிரி சட்னி செஞ்சு சாப்பிடலாம். தக்காளி சட்னி இல்லையும் பூண்டு சேர்த்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிள் அண்ட் டேஸ்டான ராஜஸ்தானி ஸ்பெஷல் பூண்டு சட்னி எப்படி பத்து நிமிஷத்துல செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
4.67 from 3 votes

ராஜஸ்தான் பூண்டு சட்னி | Rajasthan Garlic Chutney Recipe In Tamil

என்னதான் தக்காளி சட்னி தேங்காய் சட்னி சாம்பார் அப்படின்னு விதவிதமா இட்லி தோசைக்கு சட்னி செஞ்சாலும் டக்குனு ஒன் மினிட்ல செய்யக்கூடிய பூண்டு சட்னி நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும். இப்ப இருக்கிற இந்த அவசர உலகத்துல எல்லாருமே சட்டு சட்டுனு வேலைய முடிக்கணும் அப்படின்னு தான் நினைப்போம். அப்படி ரொம்பவே ஈசியா டக்குனு செய்யக்கூடிய ராஜஸ்தானி ஸ்பெஷல் பூண்டு சட்னி தான் இப்ப பார்க்க போறோம். இந்த ராஜஸ்தானி ஸ்பெஷல் பூண்டு சட்னியா இட்லி தோசை சாதம் சப்பாத்தி எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த பூண்டு சட்னியை செய்றதுக்கு நம்ம அரைக்க தேவையில்லை வதக்க தேவையில்லை பூண்டை இடிச்சு அது கூட சில பொடிகள் மட்டும் சேர்த்து பத்து நிமிஷம் கொதிக்க வச்சா போதும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, rajasthan
Keyword: Rajasthan Garlic Chutney
Yield: 4 People
Calories: 54kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 25 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பூண்டை ஒரு இடி கல்லில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு சீரகம் போட்டு தாளித்து கலந்து வைத்துள்ளதை போட்டு பத்து நிமிடம் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
  • இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து கொத்தமல்லி இலைகள் கஸ்தூரி மேத்தி தூவி இரண்டு நிமிடத்தில் இறக்கினால் சுவையான ராஜஸ்தானி பூண்டு சட்னி தயார்.

Nutrition

Serving: 450 g | Calories: 54kcal | Carbohydrates: 2.1g | Protein: 13g | Fat: 1.3g | Sodium: 51mg | Potassium: 63mg | Vitamin A: 61IU | Vitamin C: 42mg | Calcium: 15mg | Iron: 9mg

இதனையும் படியுங்கள் : வறுத்து அரைச்ச ருசியான தேங்காய் சட்னி இனி இப்படி வீட்டில் செஞ்சி கொடுங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!