- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
சிக்கன் கட்லட், மட்டன் கட்லட், சோயா கட்லட், மீன் கட்லட், வெஜிடபிள் கட்லட் என்று விதவிதமாக கட்லட் ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த மாதிரி ஒரு தடவை புரோட்டீன் அதிகமாக இருக்கும் ராஜ்மா கட்லட் ஒரு தடவை செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கட்லட் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. காலையில பிரேக் பாஸ்ட்க்கு கூட இந்த கட்லெட் ரெண்டு சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும். இந்த மாதிரி ஹை புரோட்டின் ராஜ்மா கட்லெட் சாப்பிடுவது உடம்பில் புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதையும் தடுக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே அடிக்கடி இந்த ரெசிபியை சாப்பிடணும்.
ராஜ்மா வச்சு கிரேவி கூட்டு இதெல்லாம் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை ராஜ்மா வச்சு கட்லட் செஞ்சு பாருங்க கண்டிப்பா வித்தியாசமான சுவையில் சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் நிறைய கூட சாப்பிடுவாங்க. எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தவே பத்தாது அந்த அளவுக்கு ரொம்ப ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு தக்காளி சாஸ் வச்சு சாப்பிட்டா இன்னும் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே வேண்டாம் அப்படின்னு சொல்லாம போட்டி போட்டு சாப்பிடுவாங்க.
குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு இதை ஸ்நாக்ஸ் ரெசிபியாக செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ருசியான ராஜ்மா கட்லட் ரெசிபியில் ரவை சேர்த்து செய்வதால் மொறு மொறுன்னு சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த ருசியான ரெசிபியை வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு செஞ்சு கொடுக்கலாம் ஈவினிங் டைம்ல டீ காபியுடன் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான ராஜ்மா கட்லட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ராஜ்மா மசாலா காரசாரமான ருசியில் இப்படி ஒரூ தரம் செஞ்சி பாருங்க! பூரி சப்பாத்தி புலாவ் கூட எல்லாம் வெச்சு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!
Ingredients
Method
ராஜ்மாவை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் சேர்த்து உப்பு போட்டு 5 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
அதனை நன்றாக மசித்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய், சில்லி பிளேக்ஸ், மிளகாய் தூள், ரவை கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி அதன் மேல் வெள்ளை எள் தூவி சூடான எண்ணெயில் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான ராஜ்மா கட்லட் தயார்.






