Advertisement
ஸ்வீட்ஸ்

கேசரி மிருதுவாக இப்படி செஞ்சி அசத்துங்க!

Advertisement

ரவா கேசரி கல்யாண வீடுகளில் தரப்படும் கேசரி மிகவும் சுவையாக இருக்கும். நம்மளும் வீட்டில் செய்து பார்த்திருப்போம், அந்த ருசி வராது. அதற்கு காரணம் கல்யாண வீடுகளில் பக்குவமாக செய்யப்படும் பதம் தான்.

இனி அந்த கவலை வேண்டாம் கல்யாண வீடுகளில் தரப்படும் அதே சுவையில் கேசரி நம் வீட்டிலேயே செய்து விடலாம்.

Advertisement

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

ரவா கேசரி | Rava Kesari Recipe In Tamil

Advertisement
Print Recipe
ரவா கேசரி கல்யாண வீடுகளில் தரப்படும் கேசரி மிகவும் சுவையாக இருக்கும். நம்மளும் வீட்டில் செய்து பார்த்திருப்போம், அந்த ருசி வராது. அதற்கு காரணம் கல்யாண வீடுகளில் பக்குவமாக செய்யப்படும் பதம் தான்.
இனி அந்த கவலை வேண்டாம் கல்யாண வீடுகளில் தரப்படும் அதே சுவையில் கேசரி நம் வீட்டிலேயே செய்து விடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Snack, sweets
Cuisine Indian, TAMIL
Keyword rava kesari, ரவா கேசரி
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் வறுத்த ரவை ரவை நைசாக இருக்க வேண்டும்
  • ½ கப் நெய்
  • ½ கப் எண்ணெய்
  • 12 முந்திரி
  • டேபிள் ஸ்பூன் திராட்சை
  • 2 கப் சக்கரை
  • கலர் சிறிதளவு
  • ஏலக்காய் பொடி கொஞ்சம்

Instructions

செய்முறை:

  • முதலில் ரவை எடுத்த கப் அளவிலே 3 கப் தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க விடவும்.
  • அடுத்து ஒரு கடாயில் நெய் பாதி அளவு, மற்றும் எண்ணெய் ½கப் சேர்த்து நெய், எண்ணெய் காய்ந்ததும் முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே நெய்யில் ரவை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்த நெய்யில் பாதி நெய் சேர்த்து நன்கு வறுபட்டு வரவேண்டும்.
  • பிறகு கொதிக்க வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து விடவேண்டும்.
  • இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறாமல் மூடி விட்டு வேக விடவும்.
  • பிறகு சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறிவிடவும். கட்டிகள் இல்லாமல் கலந்த பிறகு கலர், ஏலக்காய் பொடி சேர்த்து மீதி நெய் சேர்த்து கலந்து விடவும்.
  • பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்துக்கொள்ளவும்.
  • 3 நிமிடம் அப்படியே மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும்.
  • இப்பொழுது கல்யாண வீடு கேசரி தயார்.
Advertisement
swetha

Recent Posts

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

2 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

7 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

10 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

11 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

14 மணி நேரங்கள் ago