Advertisement
சைவம்

வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த வாழைக்காய் புளி வறுவல் ரெசிபியை ட்ரை பண்ணி பாக்குறீங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!

Advertisement

வீட்டில் வாழைக்காய் இருந்தால் தவறாமல் இந்த வறுவல் முயற்சி செய்து பாருங்கள். இந்த மழைக்காலத்திற்கு சுடச்சுட ரசம், சாதத்திற்கு தொட்டு சாப்பிட அத்தனை அருமையாக இருக்கும். மிக மிக சுலபமாக அசைவ வாசத்தோடு, ஒரு சைவ வறுவல். அசைவம் சாப்பிட முடியாத சமயத்தில் வீட்டில் இருக்கும் அசைவ பிரியர்களுக்கு உங்கள் கையால் இந்த வறுவலை செய்து கொடுத்தால், நிச்சயம் பாராட்டு மழை தான்.

பெரும்பாலும் வாழைக்காய் செய்வதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியது இல்லை என்பதால் அடிக்கடி செய்வது உண்டு. ஆனால் இதை அடிக்கடி சாப்பிடுவதால் வாய்வு ஏற்படும் என்கிற காரணத்தினால் சிலர் தவிர்ப்பதும் உண்டு. ஒரே மாதிரியாக வாழைக்காய் பொரியல் அல்லது வறுவல் செய்து சாப்பிட்ட நீங்கள் புதுமையான முறையில் இப்படி வாழைக்காய் புளி வறுவல் ஒரு முறை செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியம் மிகுந்த இந்த வாழைக்காய் புளி வறுவல்  செய்ய சில நிமிடம் போதும், சட்டென செய்து விடலாம். சரி, அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Advertisement

வாழைக்காய் புளி வறுவல் | Raw Banana Puli Fry In Tamil

Print Recipe
பெரும்பாலும் வாழைக்காய் செய்வதற்கு அதிகம்சிரமப்பட வேண்டியது இல்லை என்பதால் அடிக்கடி செய்வது உண்டு. ஆனால் இதை அடிக்கடி சாப்பிடுவதால்வாய்வு ஏற்படும் என்கிற காரணத்தினால் சிலர் தவிர்ப்பதும் உண்டு. ஒரே மாதிரியாக வாழைக்காய்பொரியல் அல்லது வறுவல் செய்து சாப்பிட்ட நீங்கள்
Advertisement
புதுமையான முறையில் இப்படி வாழைக்காய்புளி வறுவல் ஒரு முறை செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியம் மிகுந்த இந்த வாழைக்காய் புளி வறுவல்  செய்ய சில நிமிடம்போதும், சட்டென செய்து விடலாம். சரி, அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம், வாருங்கள்பதிவிற்குள் போகலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Raw Banana Tamarind Fry
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 245

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 2 வாழைக்காய்
  • சிறிய புளி நெல்லிக்காய் அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  • வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து அரை கப் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காயை போட்டு மஞ்சள் தூள் மற்றும் புளி கரைசலை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
  • வாணலியில் ஒரு டேபிள் ஸ்பு+ன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வேக வைத்த வாழைக்காயை போட்டு அதிகமான தீயில் வைத்து பிரட்டவும்.
  • 5 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 4 நிமிடம் பிரட்டி விடவும்.
  • வாழைக்காய் நன்கு ரோஸ்ட்டாக மாறும் வரை வைத்திருந்து பின்னர் இறக்கவும்,
  • சுவையான வாழைக்காய் புளி வறுவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 3g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : காரசாரமான வாழைக்காய் கார குழம்பை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! சாதத்துக்கு பக்காவாக இருக்கும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

14 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

14 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

15 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

16 மணி நேரங்கள் ago