- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
தினமும் நம்ம வீட்ல இட்லி தோசை தான் அதிகமாக இருக்கும் அந்த இட்லி தோசைக்கும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, வேர்க்கடலை சட்னி, சாம்பார், குருமா அப்படினு நிறைய செஞ்சு இருந்தாலும் சட்டுனு பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய ஒரு சூப்பரான பச்ச வெங்காய சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க. இந்த பச்ச வெங்காயம் சட்னி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். பொதுவா இட்லிக்கு இது சூப்பரான சைடிஷ் சுட சுட இட்லி சுட்டு அதுகூட இந்த சட்னியை வைத்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சொர்க்கமா இருக்கும். தோசைக்கும் கூட நல்ல காம்பினேஷன் தான்.
ஒரு தடவை இந்த சட்னியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இந்த சட்னியை சாப்பிடுவீங்க. இந்த பச்ச வெங்காயம் சட்னி கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க செம டேஸ்டா இருக்கும். ஸ்கூல் காலேஜுக்கு போகும்போது இல்லன்னா சட்டுனு ஏதாவது சட்னி செய்ய வேண்டும் என்றாலும் இந்த சட்னியை தாராளமா செஞ்சு சாப்பிடலாம். இந்த சுவையான சட்னிக்கு 10 இட்லி கூட சாப்பிடலாம். நல்ல காரசாரமா புளிப்பா, நாக்குக்கு ருசியா சூப்பரா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் சுருக்குன்னு இந்த சட்னியை செஞ்சு கொடுத்து பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு ஒரு கொத்து கருவேப்பிலை பெரிய வெங்காயம், தக்காளி, புளி, காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் பச்ச வெங்காய சட்னி தயார்.






