- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டு வகைகள் ஏராளம். பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூழ் வகைகள், புட்டு வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர்.
காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் புட்டை தேர்வு செய்து கொள்ளலாம். புட்டு பிரபலமான உணவு. சிவப்பு அரிசியில் இனிப்பு சேர்த்து தயாரிக்கும் போது அது மேலும் சுவையூட்டும் உணவாக அனைவரும் விரும்பும் உணவாக உள்ளது. இதை வெள்ளை அரிசிக்கு மாற்றாக எடுத்து கொள்ளலாம். சிவப்பரிசி உருண்டை, சிவப்பரிசி உப்புமா, சிவப்பரிசி லட்டு, பால், நெய், தேங்காய்த்துருவல் சேர்த்த ஊட்டச்சத்துள்ள ஸ்நாக்ஸ் என சிவப்பரிசி ரெசிபிகள் பலவும் உண்டு.
சிவப்பு அரிசியில் நார்ச்சத்து வைட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்கபடுவதால் இது சத்து நிறைந்தது. காலை மாலை என இரண்டு வேளைக்கும் ஏற்ற சரியான உணவு இது. வீட்டில் பெண் பிள்ளை வயதுக்கு வந்தால் முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களது உணவே தனியாக சிறப்பாக இருக்கும். சிலர் பூப்படைதல் தொடங்கி மாதவிடாய் வரும் வரை சில வகை உணவை அவசியம் சேர்ப்பார்கள். அப்படி சேர்க்கும் உணவில் விசேஷமானது புட்டு. அதிலும் சிவப்பு அரிசி புட்டுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த சிவப்பரிசி புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
முதலில் சிவப்பரிசியை 3 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்த பின் வடிகட்டி சிறிது நேரம் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் நன்கு புட்டு மாவு பதத்திற்கு (கைகளால் மாவை பிடித்தால் உதிர வேண்டும்) கலந்து கொள்ளவும்.
பின் புட்டு குழாயில் முதலில் சிறிதளவு தேங்காய் துருவல் வைத்து பின் புட்டு மாவை வைத்து பின் தேங்காய் துருவல் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிவப்பரிசி புட்டு தயார். இதனுடன் வாழைப்பழம் வைத்து பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.






