எப்போதுமே நாம் ஏதாவது ஒரு விஷயத்தை செய்தால் அதில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதற்கு காரணம் நம்மை பிடித்த தரித்திரம் என்று சிலர் கூறுவார்கள். அன்றாடம் சண்டை சச்சரவுகள் வருகிறது மனநிம்மதி இல்லை பூஜை அறையில் மன நிறைவாக சாமி கும்பிட முடியவில்லை என்றால் நம் வீட்டிற்குள் தந்திரம் தங்கி இருக்கிறது என்று அர்த்தம். வீட்டில் எந்த விஷயமும் நன்றாகவே நடக்கவில்லை என்றாலும் தரித்திரம் காரணம் உன் நேரமும் சூழ்நிலையும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை தட்டிக் கழிக்க கெட்ட சக்தி தரித்திரம் மூலமாக வரும். அந்த சமயத்தில் நாம் அந்த தரித்திரத்தை வெளியேற்ற சில விஷயங்களை செய்ய வேண்டும் அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முருகப்பெருமானை நினைத்து பரிகாரம்
தமிழ் கடவுள் ஆன முருக பெருமான் இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படுகிறார். முருகனை நினைத்து இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்யும்போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். வீடு அசுத்தமாக இருந்தால் கூட வீட்டிற்குள் தரித்திரம் புகுந்து விடும் அதனால் எப்பொழுதுமே வீட்டை சுத்தமாக வைத்து வாசல் தெளித்து கோலம் போட்டு பூஜை அருகையும் சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து வைக்க வேண்டும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து ஒரு மஞ்சள் துணியில் சுக்கு மிளகு கடுக்காய் போன்ற மூன்று பொருட்களையும் வாங்கி வந்து முடிச்சாக கட்டி அதனை உள்ளங்கையில் வைத்து முருகா நீதான் என் வீட்டில் உள்ள தரித்திரத்தை போக்க வேண்டும். உன்னை நம்பித்தான் இருக்கிறேன் என்று மனதார வேண்டும் பிறகு முருகப்பெருமானை நினைத்து வீட்டின் நிலை வாசலில் இந்த முடிச்சை கட்டிவிட வேண்டும்.
வீட்டுக்குள் நுழைந்த தரித்திரம்
நாம் இப்படி செய்வதால் வீட்டிற்குள் தரித்திரம் நுழைவது தவிர்க்கப்படும் முருகப்பெருமான் காவல் தெய்வமாக இருந்து அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் அழிப்பார். மேலும் நாம் வெளியே கட்டியுள்ள அந்த முடிச்சு அனைத்து தரித்திரத்தையும் கெட்ட சக்திகளையும் ஈர்த்துக் கொள்ளும். 48 நாட்கள் இந்த முடிச்சை நிலை வாசலிலே வைத்துவிட்டு அதன் பிறகு இதனை கொண்டு பொய் யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். 48 நாட்களுக்குப் பிறகு உங்கள் வீட்டில் வித்யாசம் இருப்பதை உங்களால் உணர முடியும். 48 நாட்களும் பூஜை அறையில் முருகனுக்கு விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை படித்து முருகப்பெருமானுடைய அருளை பெற வேண்டும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் தங்கம் சேர வேண்டுமானால் ? இரகசியமாய் யாருக்கும் தெரியாமல் இதை மட்டும் செய்து விடுங்கள்!


