ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நம்முடைய முன்னேற்றத்திற்குரிய வளர்ச்சியை ஒரு சிலர் பார்த்து வியந்து பொறாமை கொண்டு நம் வாழக்கூடாது என்று நினைத்தால் அதனால் நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில தடைகள் ஏற்படும். எதிர்மறை ஆற்றலால் ஏற்படும் இந்த தடைகளை நீக்குவதற்கு பலவிதமான பரிகாரங்களை நாம் செய்ய வேண்டும். பொறாமை பட்டு நம்மில் ஒரு சில தீய சக்திகளை ஏவி விடுவதற்கும் வாய்ப்பு உண்டு அப்படி ஏவி விட்டதற்கான அறிகுறிகளாக வீட்டில் அடிக்கடி சண்டை உடல்நிலை கோளாறு போன்றவை ஏற்படும். இவை அனைத்தையும் சரி செய்வதற்கு மட்டை தேங்காயை வைத்து செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

தேங்காய்
தேங்காய் என்பது சிவபெருமானின் அம்சம் கொண்டது கோவில் கும்பாபிஷேகம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் கலசம் வைப்பதற்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. மட்டை தேங்காயை பயன்படுத்தி நாம் செய்யும் சில வழிபாடுகள் சிறந்த பலனை கொடுக்கும். அந்த வகையில் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை விளக்குவதற்கு மட்டை தேங்காயை வைத்து இந்த எளிமையான வழிபாட்டை செய்யலாம்.
மட்டை தேங்காய் பரிகாரம்
ஒரு மட்டை தேங்காயை எடுத்து முதலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அதில் சந்தனம் குங்குமம் சிறிதளவு பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து மட்டை தேங்காயில் முழுவதும் இந்த கலவையை வைத்து பூச வேண்டும். பிறகு அதன் மேல் பச்சை கற்பூரத்தை எடுத்து நுணுக்கி தூவி விட வேண்டும் மட்டை தேங்காயை நிழலில் வைத்து நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு வெள்ளெருக்கு நார் வாங்கி இந்த மட்டை தேங்காயில் சுற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து குலதெய்வத்தை படத்திற்கு முன்பாக அந்த மட்டை தேங்காயை வைத்துவிட வேண்டும்.
மட்டை தேங்காய் வழிபாடு
தினமும் காலையில் வீட்டில் எழுந்து பூஜை கறியை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வீட்டில் வைத்துள்ள இந்த மட்டை தேங்காய்க்கும் சாம்பிராணி ஊதுபத்தி தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்யும் போது வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக வேண்டும் எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக 48 நாட்கள் மட்டை தேங்காயை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு அடுத்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்று அந்த தேங்காயை கடலில் கொண்டு போய் போட வேண்டும். கடல் இல்லை என்றால் ஆறு குளங்களில் போட்டுவிடலாம். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் உள்ள தீய சக்திகள் சுலபமாக வெளியேறும் முழு நம்பிக்கையோடு குலதெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தர இந்த இரண்டு பொருள் கையில் இருந்தால் போதும்!



