ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே அவரைப்பார்த்து வயிறு எரிவார்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் நல்லவர்களைக்கூட கஷ்டத்திற்கு உள்ளாக்கும். நோய் நொடிகள் வந்து பாடாய் படுத்தும். எனவே கண் திருஷ்டி நீங்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். அது எளிமையான பரிகாரம் தான். கல்லடிபட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படவே கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல் அடிப்பட்டவர்கள் கூட, ஒரு சில நாட்களில் அந்த காயத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டால் அதன் மூலம் வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும். கோவிலில் சென்று கேட்டால் கண் திருஷ்டி போக சில பரிகாரங்களையும் சொல்வார்கள். எளிதான அந்த பரிகாரத்தை ஞாயிற்றுகிழமைகளில் செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி பிரச்சனை தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
கண் திருஷ்டி நீக்கும் பரிகாரம்
பரிகாரம் 1
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான ஒரு பொருள் படிகார கல். ஒரு படிகார கல்லை வாங்கி உங்க வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை இரவு தூங்க செல்வதற்கு முன்பு பூஜை அறையில் வைத்த வாராகித் தாயை மனதார நினைத்து எங்கள் குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி எல்லாம் நீங்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு தூங்கச் செல்லும்போது அவரவர் தலையணைக்கு அடியில், அவரவரிடம் இருக்கும் படிகார கல்லை வைத்துவிட்டு தூங்குங்கள். மறுநாள் காலை எழுந்து எல்லா படிகார கல்லையும் வீட்டுக்கு வெளியில் நெருப்பில் போட்டு பொசிக்கி விடலாம் அல்லது ஓடுகின்ற தண்ணீரில் விடலாம்.
பரிகாரம் 2
சிவப்பு துணியை விரித்து அதில் மூன்று பூண்டு பற்களை உரித்து சேருங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சாம்பிராணி பவுடர், ஒரு துண்டு அடுப்புக்கரி ஆகியவற்றை சேர்த்து மூட்டையாகக் முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். பின்பு அதனை உங்கள் தலை வாசல் படியில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். யாருடைய கைகளிலும் தலையிலும் இது உரசக்கூடாது. ஞாயிற்றுகிழமை மாலையில் சூரியன் மறைவதற்கு முன்னர் இதை செய்வது நல்லது. இதன் மூலம் கண்திருஷ்டி நீங்கும் வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். நோய்கள் நீங்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பரிகாரம் 3

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் வெண் கடுகு. இது கடவுள் தன்மையைக் கொண்டது. வீட்டில் பூஜை செய்யும் போது உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி அனைத்தும் நீங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என நம்பப்படுகிறது. மேலும் இதனுடன் நீங்கள் மருதாணி விதையை சேர்த்து தூபம் போட்டால் கூடுதல் நன்மைகளை அடையலாம்.
பரிகாரம் 4
வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண்படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.
இதனையும் படியுங்கள் : திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்



