வெயில் காலங்களில் வெயில் நேரத்தில் வெளியில் அதிகமாக பயம் செய்வதன் காரணமாக உங்கள் முகம் கருமையாக மாறிவிட்டதா ? கண்களை சுற்றி கருவளையம் அதிகமாக உள்ளதா ? இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு உள்ளதா அப்படி என்றால் வெறும் ஓரே வாரத்தில் இதை சரி செய்யலாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் இயற்கையாக ஒரு பேக் ஒன்று தயார் செய்து உங்கள் கருமையான முகத்தையும், கருவளையத்தையும் போக்கிக் கொள்ளலாம். இதை எப்படி செய்வது, செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்முறைகள் மற்றும் அப்பளை செய்யும் முறை என அனைத்தையும் இந்த அழகு குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :-
1 – நீளமான வெள்ளரிக்காய்
1 டீஸ்பூன் – முல்தானி மெட்டி
1 – தக்காளி
செய்முறை 1 :-
முதலில் ஒரு வெள்ளரிக்காயை பாதியாக வெட்டி அதை தேங்காய் துருவுவது போல் நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
இப்போது துருவிய வெள்ளரிக்காயை ஒரு கை எடுத்து அதை பிழிந்து அந்த சாற்றை ஒரு பவுளில் சேகரித்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 3 :-
பின்பு தக்காளி எடுத்துக்கொண்டு தக்காளியின் அடிப்பாகத்தில் சிறிய தூளை போன்று வெட்டி எடுத்து கொள்ளுங்கள் பின்பு அந்த தக்காளி பழத்தை அப்படியே பிழிந்து அந்தச் சாறையும் வெள்ளரிக்காய் சாறுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 4 :-
அதன் பின்பு முல்தானி மெட்டி பொடியை ஒரு டீஸ்பூன் அளவில் வெள்ளரிக்காய், தக்காளி சாறுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள் இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.
அப்பளை செய்யும்முறை :-
செய்முறை 1 :-
இந்த பேஸ்புக் உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் உங்களது முகத்தை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
பின்பு இந்த பேஸ் பேக்கை ஒரு பிரஸ்ஸை வைத்து உங்கள் முகத்தில் அப்பளை செய்து கொள்ளுங்கள். கண்னில் உள்ள கருவளையம் பகுதியை மட்டும் விட்டுவிட்டு உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
செய்முறை 3 :-
பின்பு உங்கள் கழுத்து பகுதியிலும் அடி கழுத்து வரை ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் முகம் ஒரு கலராகவும் கழுத்து ஒரு கலராகவும் மாற்றிவிடும்.
செய்முறை 4 :-
இப்படியா ஃபேஸ் பேக்கை அப்ளை செய்துவிட்டு மீதி இருக்கும் வெள்ளரிக்காயே வட்டமாக வடிவமாக வெட்டிக்கொண்டு. உங்கள் கண்களில் கருவளையம் இருக்கும் இடத்தில் வெள்ளரிக்காயை வைத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 5 :-
வெள்ளரிக்காவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதாலும், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளதாலும் உங்கள் கண் பகுதியில் உள்ள கருவளையத்தை வெள்ளரிக்காய் வைப்பதன் மூலம் போக்கிவிடும்.
செய்முறை 6 :-
இந்த பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வாரம்தோறும் அப்ளை செய்து வாருங்கள் வெயிலின் காரணமாக கருத்திருந்த உங்கள் முகம் வெள்ளையாக மாறிவிடும்.