நம் உடம்பில் ஏற்படும் பிரச்சனையாக நாம் கருதும் முக்கிய பிரச்சினை முடி பிரச்சனை ஆம் தலை முடி பிரச்சனை. இதில் பல பேர் சந்திக்கக்கூடிய விஷயமான தலைமுடி உதிர்தல், தலைமுடி நரைத்து போதல் இது போன்ற விஷயங்களை பெரும்பாலானவர்கள் கல்யாணத்திற்கு பின்பு ஒரு 30 வயதிலிருந்து சந்திக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த இளம் நரை பிரச்சனையே எப்படி சிறிது காலம் வராமல் தடுப்பதும் நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு எண்ணெய் தயார் செய்து அந்த எண்ணையை வைத்து இந்த பிரச்சனைகளை தடுக்கலாம். சில பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அந்த எண்ணெய் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த ஆழகு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :-
கார் போக அரிசி – 50 கிராம்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
நெல்லிமுள்ளி – 50 கிராம்
தேங்காய் எண்ணெய் – 500ml
செய்முறை 1 :-
முதலில் கார்போக அரிசியே மிக்ஸி ஜாரில் போட்டு திருதிருவன பொடியாக வரும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
பின்பு கடாயை அடுப்பில் வைத்து அந்த கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி விடுங்கள் தேங்காய் எண்ணெய் சூடறும் வரை காத்திருங்கள். தேங்காய் எண்ணெய் சூடேறியவுடன்.
செய்முறை 3 :-
நாம் பொடியாக்கி வைத்திருக்கும் கார்போக அரிசி, கருவேப்பிலை, நெல்லிமுள்ளி, இந்த மூன்று பொருட்களையும் போட்டு விடவும். அதன்பின்பு ஒரு கலக்கு கலக்கி விடவும்.
செய்முறை 4 :-
நாம் சேர்த்திருக்கும் பொருள்களின் சத்துக்கள் அனைத்தும் தேங்காய் எண்ணெயில் இறங்கி தேங்காய் எண்ணெய் நிறம் மாறும் வரை காத்திருக்கவும். எண்ணெய் நிறம் மாறிய பின் அடுப்பை அணைத்து கடாய் இறக்கி விடுங்கள்.
செய்முறை 5 :-
அதன் பின்பு இந்த எண்ணையை அப்படியே அதே கடாயில் 8 மணி நேரங்கள் ஊற விட்டு விடுங்கள் அதன் பின்பு இந்த எண்ணையை தனியாக வடிகட்டி எடுத்துக்கொண்டு.
செய்முறை 6 :-
நீங்கள் எப்போதும் உபயோகிப்பது போல் தேங்காய் எண்ணெயாக உபயோகித்துக் கொள்ளுங்கள் உங்கள் இளம் நிறைய காலத்தை தள்ளிப்படும் உங்கள் முடி பிரச்சனைகளுக்கும் இது ஒரு தீர்வாக இருக்கும்.