உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது அரிசி பருப்பு உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது இரவு நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது. இதில் நாம் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சைப் பட்டாணி போன்ற பல விதமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம். நம்மில் பெரும்பாலோனருக்கு உப்புமா என்றாலே முகம் சுளித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் உப்புமாவானது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மற்றும் ஆரோக்கியமான வகை ஆகும்.
உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட விரும்புவோம். குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்து சூடாக ஏதாவது செய்து தர கேட்பார்கள். அப்போது அரிசி சேர்த்து உப்புமா செய்யுங்கள். பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சமைக்கலாம். உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் பருப்பு மற்றும் அரிசி சேர்த்து அட்டகாசமான சுவையில் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
அரிசி பருப்பு உப்புமா | Rice Dal Upma Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1 வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 வர மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி விட்டு ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை தண்ணீர் வடிந்து சேர்த்து அதனுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை அளவிற்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள அரிசி பருப்பை சேர்த்து கட்டுரைகள் இல்லாமல் நன்கு கலந்து மூடி வைத்து விடவும்.
- பின் அரிசி பருப்பு வெந்ததும் ஐந்து உப்புமா நெய், நறுக்கிய மல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான அரிசி பருப்பு உப்புமா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!