நாவில் எச்சி ஊறும் ரிச் மீன் கோஃப்தா கறி இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் மிக விருப்பமான உணவாக இருக்கும். அதிகபட்சமாக நமது வீடுகளில் மீன் வறுவல் மற்றும் குழம்பு தான் செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய உணவு வகை ரிச் மீன் கோஃப்தா கறியை செய்து சுவைத்து பாருங்கள். இது மீன் சமைக்க மிகவும் எளிமையான வழியாகும், இது மிகவும் வித்தியாசமான செய்முறையிலும் ,

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான நெல்லை மீன் குழம்பு செய்வது எப்படி ?

- Advertisement -

மிகவும் சுவையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரிச் மீன் கோஃப்தா கறி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த ரிச் மீன் கோஃப்தா கறி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Print
No ratings yet

ரிச் மீன் கோஃப்தா கறி| Rich Fish Kofta Curry Receipe in Tamil

பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் மிக விருப்பமான உணவாக இருக்கும். அதிகபட்சமாக நமது வீடுகளில் மீன் வறுவல் மற்றும் குழம்பு தான் செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய உணவு வகை ரிச் மீன் கோஃப்தா கறியை செய்து சுவைத்து பாருங்கள். இது மீன் சமைக்க மிகவும் எளிமையான வழியாகும், இது மிகவும் வித்தியாசமான செய்முறையிலும் , மிகவும் சுவையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Prep Time15 minutes
Active Time25 minutes
Total Time40 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: மீன் குழம்பு, ரிச் மீன் கோஃப்தா கறி
Yield: 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • ½ kg மீன்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • 5 gm இஞ்சி
  • 15 gm கொத்தமல்லித்தழை
  • 5 gm புதினா தழை
  • 1 tsp மசாலா தூள்
  • 1 tsp சீரகம்
  • 1 முட்டை
  • 3 தேங்காய் எண்ணெய்
  • உப்பு                              தேவையான அளவு

செய்முறை

  • ரிச் மீன் கோஃப்தா கறி செய்ய முதலில் சதைப் பற்றுள்ள அரை கிலோ மீனை வேகவைத்து தோல், முள் நீக்கி உதிர்த்து வைக்க வேண்டும்.
  • உதிர்த்து வைத்துள்ள மீனை மிக்சியில் அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டித் துண்டுகளில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் நெய்யை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, பூண்டு, இரண்டும் அரைத்த விழுது எடுத்து கொள் வேண்டும்.
  • பின் அதனை சேர்த்து போட்டு வதக்க வேண்டும். தோல் எடுத்து பொடியாக நறுக்கிய 3 தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
  • சுடுதண்ணீர் ஒரு கப் விட்டு அது கொதிக்கும்போது பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகள், கரம் மசாலா, சீரகம் போட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.
  • நெய் மேலே மிதக்கும்போது கால் டம்ளர் பால், கொஞ்சம், குங்குமப்பூ போட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  • பிறகு இறக்கி கிரீம், கொத்தமல்லித் தழையால் அலங்கரித்து பரிமாறவும். அரைத்த முந்திரி பருப்பு விழுது அரைகப், சேர்த்துக் கொண்டால் கிரேவி நல்ல மணத்தோடு ருசியாகவும் இருக்கும்.ருசியான மீன் கோஃப்தா ரெடி

Nutrition

Serving: 350g | Carbohydrates: 16g | Fat: 30g | Saturated Fat: 4.2g | Polyunsaturated Fat: 12.4g | Monounsaturated Fat: 10.2g | Cholesterol: 216mg | Sodium: 1490mg | Potassium: 1432mg | Fiber: 3.2g | Sugar: 5.3g | Vitamin A: 35.2IU | Calcium: 156mg | Iron: 3.5mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here