- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
அசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீன் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்களான ஒமேகா 3 இதில் உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது. மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன.
மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இது நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதுடன் புற்று நோயிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பொதுவாக மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதனால் எப்போதும் போல் குழம்பு, வறுவல் என்று செய்யாமல் ரோட்டுக்கடை ஸ்டைலில் ஒரு காரசாரமான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
என்னதான் வீட்டில் பார்த்து பார்த்து சமைத்தாலும் ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையில் இல்லை என்று நிறைய பேர் சொல்வார்கள். அதிலும் ரோட்டுக்கடை மீன் வறுவல் என்றாலே தனி சுவை தான். அதே மீனை வீட்டில் வறுத்தால் அந்த சுவை வருவதில்லை. ஆனால் இந்த முறையில் செய்து பாருங்கள் ரோட்டுக்கடை சுவை அப்படியே இருக்கும். ரோட்டுக்கடை மீன் வறுவல் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் அரிசி மாவு, சோள மாவு, காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு, கஸ்தூரி மேத்தி, மஞ்சள் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை நாம் கலந்து வைத்துள்ள மசாலாவில் நன்கு பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ரோட்டுக்கடை மீன் வறுவல் தயார்.






