- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ரோஸ் புட்டிங் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீ செய்து கொடுக்காமல் இந்த ரோஸ் புட்டிங் செய்து கொடுங்கள்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் பஜ்ஜி, வடைன்னு செய்து கொடுக்காமல் இந்த மாதிரி ஒரு தடவை ரோஸ் புட்டிங் செய்து கொடுங்கள் கண்டிப்பா சாப்பிட்டு அசந்து போய்டுவார்கள். சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது.
ஆனால் இனி அப்படி இல்லை. நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம். கோடைக்காலம் வந்தாலே புட்டிங் விற்பனை களைகட்டும். ஏனென்றால், நம்மில் பலர் வெயில் தாக்கம் தாங்க முடியாமல் அடிக்கடி புட்டிங் போன்ற உணர்வுகளை வாங்கி உண்போம். அப்படி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான ரோஸ் புட்டிங்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆப்பிள் சாக்லேட் புட்டிங் இந்த மாதிரி செஞ்சு பாருங்க வெயிலுக்கு சூப்பரா இருக்கும்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சி கொள்ளவும்.
பின் சர்க்கரை, சோள மாவு, ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
பின் ஒரு பவுளில் பிரெஷ் கிரீம், கண்டென்ஸ்டு மில்க், ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் ஓரங்களை நறுக்கி ஒரு பிரெட்டை வைத்து அதன்மேல் காய்ச்சிய பாலை ஊற்றி மீண்டும் அதன்மேல் பிரட்டை வைத்து அதன்மேல் பால் சேர்த்து அதன்மேல் ஒரு பிரெட் வைத்து அதன்மேல் நாம் கலந்து கொண்டுள்ளார் கண்டென்ஸ்டு மில்கை ஊற்றி பிரிட்ஜில் வைத்து விடவும்.
பின் இதனை வெளியே எடுத்து நறுக்கிய பிஸ்தா சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ரோஸ் புட்டிங் தயார்.






