பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. இது செரிமானத்திற்கு உகந்ததாக இருப்பதால் விருந்துகளில் நிறைவு உணவாக பரிமாறப்படுகிறது. பாயாசம் வெவ்வேறு பொருட்களை கொண்டு வெவ்வேறு விதமாக செய்யப்படுகிறது. பாயாசங்களில் பல ரகம் உண்டு. அதில் பால் பாயாசம், பருப்பு பாயாசம், மற்றும் அவல் பாயாசம் முக்கியமானவை. அந்த வகையில் இந்த பதிவில் சாமை பாயாசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். அத்தகைய தானியங்களில் ஒன்று தான் சாமை. இந்த சாமையைக் கொண்டு உப்பு, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.
சாமையில் புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து முதலியன உள்ளன. சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. இதுவரை சேமியா, ஜவ்வரிசி கொண்டு தான் பாயாசம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான சாமையைக் கொண்டு பாயாசம் னய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை முயற்சி செய்யுங்கள். மேலும் இந்த சாமை பாயாசம் இனிப்பானது என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சாமை பாயாசம் | Samai Payasam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் சாமை
- 1/2 கப் வெல்லம்
- 1/2 கப் பால்
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/2 டீஸ்பூன் சுக்கு தூள்
- 10 முந்திரி
- நெய் தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சாமையை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும்.
- ஒரு குக்கரில் வறுத்து வைத்துள்ள சாமையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் மற்றும் பால் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் சாமை வெந்ததும் வெல்லத்தை பொடித்து சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சுக்கு பொடி சேர்த்து கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- சாமை நன்கு குழைய வெந்து பாயாச பதத்திற்கு வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் சிறிதளவு நெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சாமை பாயாசம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான சாமை உப்புமா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!