வாழ்க்கையில் இருக்கக்கூடிய துயரங்களையும் சங்கடங்களையும் கூடிய கடவுள்தான் விநாயகர் பெருமான் அப்படிப்பட்ட விநாயகர் பெருமானுக்கு மாதம் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று அவருடைய மனம் குளிர் என நாம் வழிபாடு செய்தால் நம்முடைய பண கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து பணம் அதிகரிக்கும் பணம் அனைவருக்கும் தேவையான ஒன்று அந்த பணத்தேவையை பூர்த்தி செய்ய சங்கடகர சதுர்த்தி அன்று இந்த எளிமையான வழிபாட்டை செய்யுங்கள்.
பண தேவை

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக பணம் கண்டிப்பாக தேவைப்படும். பண தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு வந்துவிட்டால் கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. வருமானத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழலாம். பண தேவையை பூர்த்தி செய்வதற்கு வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த பரிகாரம் உதவியாக இருக்கும்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
சங்கடஹர சதுர்த்தி நாள் இன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை ஒரு சில வழிபாடு செய்வார்கள் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் கூட விநாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்யலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான வழிபாட்டு முறையை பின்பற்றுவார்கள். ஒருமுறை இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள்.
சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய விநாயகர் வழிபாடு
மாலை 6 மணிக்கு மேல் படம் அல்லது சிலையை சுத்தம் செய்து உங்களால் முடிந்த அளவு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் ஏதாவது செய்து கொள்ளுங்கள். சுத்தமான சந்தனத்தில் பன்னீரை சேர்த்து கலந்து கெட்டியாக பிசைந்து விநாயகரின் தொந்தியில் வைக்க அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தையும் ஒட்டி வைக்க வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி விட்டு இரண்டு தீபம் ஏற்றி வைத்து உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்யலாம். இறுதியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
சந்தன ஒரு ரூபாய்
மறுநாள் காலை விநாயகர் வைத்த சந்தனத்தையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் எடுத்து உங்களுடைய பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை செலவு செய்யாமல் வைக்க வேண்டும் சந்தனத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். விநாயகப் பெருமானுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும்.
இதனையும் படியுங்கள் : விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட நினைப்பவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை..!