ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். சனி கொடுக்க எவர் தடுப்பார், சனி தடுக்க எவர் கொடுப்பார் என்ற சொற்றொடர்க்கு ஏற்றவாறு இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனுடன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும் சனி.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு முழுவதும், சனி பாகவான் கும்ப ராசியில் தான் பயணிப்பார், ஆனால் நட்சத்திரத்தை மாறிக்கொண்டே இருப்பார். சனி பகவான் கூடிய விரைவில் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். குருவின் அதிபதி நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் வக்ர நிலையில் நகர்ந்து பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் ஆகஸ்ட் 18 பெயர்ச்சி அடைவார். குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலத்தை தரும் என்று பார்ப்போம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு பலன்களை தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக உங்கள் நல்ல நேரம் தொடங்கும். மேலும் நீங்கள் முன்பை விட நேர்மறையாக உணருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். பழைய முதலீட்டால் நிதி நிலை மேம்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி நன்மையான பலனைத் தரும். செல்வம் பெருகும். தாயின் உடல்நிலை சீராகும். இந்த காலத்தில் தொழில் விருத்தி அடையும். பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் நிதி நிலை மேன்மையடையும். சனிபகவான் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் பலனைத் தருவார்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலில் நிதி ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் :குரு பெயர்ச்சியால், குபேர யோகம் 2025 க்குள் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்


