சனீஸ்வர பகவான் நீதியின் கடவுள். அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கக் கூடியவர். ஒருவரை நல்வழிப்படுத்த அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுத்து நம்மை நல்வழிப்படுத்துவார். சனீஸ்வரரின் பார்வையினால் நிறைய கஷ்டங்களைப்பட்ட பிறகு ராஜயோகம் அடைந்தவர்களின் கதைகள் பல உண்டு. நளதமையந்தி அரிச்சந்திரன் போன்றவர்கள் எல்லாம் சனீஸ்வரனின் பார்வையினால் அனைத்து கஷ்டங்களையும் பட்டு மேன்மை அடைந்தார்கள். ஆகையால் சனீஸ்வர பகவானை பற்றி நினைக்கும் போது பயம் கொள்ள தேவையில்லை. காரணம் நம் கர்ம வினைப்படி மட்டுமே அனைத்தும் நடக்கும்.
அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி பகவான். இவருக்கும் எல்லா கிரகங்களையும் போல வக்கிரம் அடைவதும் வக்கிர நிவர்த்தி அடைவதும் உண்டு. இப்போது சனீஸ்வர பகவான் வக்கிர நிலையில் இருக்கிறார் . நவம்பர் 4ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து மீண்டும் பழைய நிலையை அடைவார். அப்படி வக்கிர நிவர்த்தி அடையும் பொழுது அவரின் பார்வை படும் கிரகங்கள் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். ராஜயோகம் அடையப் போகின்ற ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். சனியன் வக்கிர நிவர்த்தி எல்லா ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளில் லாபகரமான மாற்றத்தை கொடுக்க இருக்கிறது. அப்படிப்பட்ட லாபகரமான மாற்றத்தினால் ராஜ யோகம் அடையப்போகும் ராசிகளை பற்றி பார்க்கலாம்.
ரிஷபம் ராசி
சனி வக்கிர நிவர்த்தியால் ரிஷப ராசியில் லாபகரமான மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைப் கொடுக்க இருக்கிறது. இவர்களின் தலைவிதியை மாற்றப் போகிறார் சனீஷ்வர பகவான். வேலையில் உயர் பதவி கிடைக்க இருக்கிறது. நிதியில் பெரிய நன்மை நடைபெற இருக்கிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. வியாபாரம் விரிவடைவதற்கு பொன்னான வாய்ப்புகள் வர இருக்கிறது . உங்கள் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவாய் அதிகமாக ஈட்டுவதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுன ராசி
கும்ப ராசியில் வக்கிர நிவர்த்தி அடையும் சனியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். நிலம், வீடு, வாகனம் வாய்ப்புகள் அதிகம் உண்டு . பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். வேலையில் உயர்ப்பதவிகள் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்ம ராசி
சனியின் வக்ர நிவர்த்தியால் பலன் பெற போகும் சிம்ம ராசிக்காரர்களே! உங்களுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பம் கணவன் மனைவி உறவு வலுப்படும். பிள்ளைகளினால் நல்ல செய்திகளை கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் . இதுவரை பிரச்சனைகளிலிருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும்.
கும்ப ராசி
கும்ப ராசியின் அதிபதியான சனீஸ்வர பகவான் இப்பொழுது கும்ப ராசியில் தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் கும்ப ராசிக்கு நிறைய நற்பலன்கள் கிடைக்கும். பெரிய நபர்களின் நட்புறவு கிடைக்கும் . நல்ல பண வரவு இருக்கும். கூட்டு தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். தொழில் விருத்தி அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
இதனையும் படியுங்கள் : ராகு கேது பெயர்ச்சியினால் மகாலட்சுமியின் அருள் பெற்று ராஜயோக ராசிக்கார்கள் இவர்கள் தான்!