நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் சனி கிரகம். கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார். சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான். ஆனால் சனி கிரகத்தைப் பார்த்து பயப்பட தேவையில்லை. நல்லது நினைத்து நல்லது செய்பவர்களுக்கு சனி எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அரசியலில் புகழ் பெற்று திகழவேண்டும் என்றால் அவருக்கு சனி நல்ல உதவி செய்வார். அதே நேரம் சனி நோய்கள், விபத்திற்கும் காரகர்.
சனி சரியில்லாமல் இருந்தால் உறவில் கூட விரிசல் ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். சனி பிறவி ஜாதகத்தில் மோசமாக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். நிறைய சோதனைகள் தந்து அவர்களை சாதனைகள் புரிய வைப்பார். ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று பலரும் பயத்துடனேயே பேசுவார்கள். சனி பகவான் நிறைய பேரை பயமுறுத்தி வைத்திருக்கிறார். சனி பெயர்ச்சி காலத்தில் மட்டுமல்ல சிலருக்கு சனி தசை, சனி புத்தி காலத்திலும் பாதிப்பு ஏற்படும்.
சனி கிரகம் துலாம் ராசியில் உச்சம் அடைகிறது. ஒரு ஜாதகத்தில் சனி உச்சம் அடைந்தால் அவர்கள் கடின உழைப்பால் வாழ்கையில் உயர்வு அடைவார்கள். சுய தொழில் செய்தல் ஆரம்ப களத்தில் கடுமையாக உழைத்து பிற்காலத்தில் நிறைய பணியாளர்கள் கொண்டு தொழில் செய்கிற உன்னத நிலையை எட்டி பிடிப்பவர்கள். அந்தவகையில் கோடீஸ்வர யோகமும், பதவி யோகமும் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி
சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளதால் மேஷ ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. 2025 வரை மேஷ ராசிக்கு அதிகப்படியான செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்படுகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நேரடி சஞ்சாரம் மிகவும் நன்மை பயக்கும். தீபாவளிக்கு முன், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு நேரம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது.
தொழில் துறையை விரிவுபடுத்துவது பற்றி யோசிக்கலாம். பணிபுரிபவர்கள் தங்கள் முதலாளியிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதே சமயம் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அனைத்திலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக எலும்பு, நரம்பு சார்ந்த பிரச்னைகள் தொல்லைக் கொடுக்கலாம்.
மிதுன ராசி
மிதுன ராசியில் சனிபகவான் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். மிதுன ராசிக்கு பதினொன்றாம் இடம் அதிர்ஷ்டம், செல்வம் பெருகக்கூடிய இடமாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் மிகவும் நன்மை பயக்கும். உங்கள் காதல் உறவில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் ஒரேடியாக நீங்கும்.
வியாபாரத்தில் உங்கள் பங்குதாரரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் வலுவாக இருக்கும். வழிபாட்டில் ஈடுபடுவதால் மன உளைச்சல் நீங்கும். பணமும் வந்து சேரும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கலாம், அது எதிர்காலத்தில் பலனைத் தரும். சொத்து வாங்குதல் மற்றும் விற்பதில் இப்போது அதிக லாபம் உண்டாகும்.
துலாம் ராசி
சனிபகவான் துலாம் ராசியில் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனி உங்களுக்கு சுகபோகங்களைத் தருவார். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து திடீர் பண வரவு இருக்கும்.
சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. உங்கள் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். சமூகத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும். சனிபகவான் அருள் ஆசி எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சனி பகவானின் நிலையில் ஏற்படப் போகும் மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நேரடி சஞ்சாரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தனுசு ராசிக்காரர்களின் கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி விடிவுகாலம் பிறக்கப்போகிறது. வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது. வியாபாரத்தில் உங்கள் நிலை தொடர்பான சில பெரிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த சூழல் இருக்கும்.
சனிபகவான் கும்ப ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். இதனால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய திட்டங்களை உருவாக்கி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் நல்லுறவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : இந்த மூன்று ராசிகார பெண்னை திருமணம் செய்தால் நீங்கள் தான் பெரிய அதிர்ஷ்டசாலி!