மேஷம்

மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் 11-ம் இடம் பலமாக உள்ளதால் எண்ணியவை யாவும் நிறைவேறும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மற்றவர்களை முழுவதும் நம்பிவிட வேண்டாம். மாணவர்கள் விளையாட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். செலவுகள் அதிகரித்தாலும் வருமானத்திற்கும் வழி உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வந்து கொண்டு இருக்கும். உறவுக்கு இடையே காணப்பட்ட மனஸ்தாபங்கள் மறையும். தொழில் இயக்கம் நன்றாக இருக்கும். புனித நதிகளில் நீராடுவதுமான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வீடு மற்றும் இடமாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு காரியத் தடைகள் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்து பிரச்னைகள் இருக்கும்.
ரிஷபம்

ரிஷபம் ராசியினருக்கு 10-ம் இடம் பலமாக இருப்பதால், எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த நன்மை பெறுவர். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் ஆதாயமடைவர். மாணவர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். சிந்தனை நல்ல விதமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் அடைபட்டு விடும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் ஏற்படும். சிலருக்கு அவர்களைப் பற்றிய கவலையால் அமைதி கெடும். சிலருக்கு வம்பு வழக்குகள் வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்

மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் 9-இடம் பலமாக இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டு. வியாபாரிகள் தொழில் வெற்றிக்கான விஷயங்களை செயல்படுத்தலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். கடன் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும். மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வர். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அரசாங்க காரியங்களில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. சுக்கிரன் பலமாக இருப்பதால் கலைஞர்களுக்கு சிறந்த நன்மை கிடைக்கும். தந்தை வழி உறவுகளில் கவனம் தேவை. வண்டி வாகனங்களால் தொந்தரவு உண்டு. வீடு கட்டுதல் தாமதமாகும்.
கடகம்

கடகம் ராசியினருக்கு இந்த வாரம் 8-ம் இடம் பலமாக இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரம் ஆகியவற்றில் புதிய திட்டங்களை நிறைவேற்றலாம். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவை பெறுவர். மாணவர்கள் கணினி லாங்க்வேஜ் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். எதிரிகள் விலகுவார்கள். வெளியூர் பயணங்கள், ஆன்மீக சுற்றால செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கியிருக்கும். சுபகாரியங்களில் உள்ள தாமதம் விலகும். சகோதர உறவுகள் பலப்படும். புதிய சிந்தனைகள் உருவாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை தந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். எதிலும் பொறுமையும் கவனமும் தேவை. பணியிடத்தில் பணிகள் அதிகரித்து அலைச்சல் நிறைந்து காணப்படும்.
சிம்மம்

சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் 7-ம் இடம் பலமாக உள்ளதால் வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம் நன்மை உண்டு. வியாபாரிகள் மகிழ்ச்சிகரமான முன்னேற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெற்று உற்சாகம் அடைவர். மாணவர்கள் உற்சாகமாக கல்விச் சுற்றுலா சென்று மகிழ்வர். போட்டி தேர்வுகளில் பங்கெடுத்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு. வீடு வாங்குதல் விற்றல் வகையில் பணவரவு உண்டு. சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு. பொருளாதார ரீதியான வெற்றிகள் அமையும். சில நேரங்களில் சிந்தனைத் தடுமாற்றம் உண்டு. கணவன் அல்லது மனைவியின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். சுப காரிய முயற்சிகளில் சிறு தடைகளும் ஏற்படலாம்.
கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் 6-ம் இடம் பலமாக இருப்பதால் பழைய கடன்கள் தீரும். வியாபாரத்தில் சிக்கல்கள் அகன்று முன்னேற்றம் அடையும். உத்தியோகஸ்தர்கள் காலத்துக்கேற்ற தொழில்நுட்பத்தை கற்பது அவசியம். மாணவர்கள் எதிர்கால நலனுக்கான தொழில்நுட்பங்களை பழகுவார்கள். வருமானம் நல்ல முறையில் இருக்கும். குடும்பச் சூழ்நிலையில் அமைதி நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டாம். புதிய முயற்சிகளிலும் இப்போது இறங்க வேண்டாம். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை.
துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் 5-ம் இடம் பலமாக இருப்பதால் மனதில் தெய்வீக உணர்வும், புதிய சிந்தனைகளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் தங்கள் தனித்திறன்களை காட்டும் நேரம் இது. மாணவர்களுக்கு வெளிநாடு சென்று பணியாற்றுவது குறித்த ஆர்வம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகும். அரசாங்க ரீதியான காரியங்கள் வெற்றியாகும். சிலருக்கு விரும்பிய இடத்தில் உத்தியோகம் மாற்றம் கிடைக்கும். வணிகம் செய்பவர்களுக்கும் சிறப்பான லாபம் உண்டு. ஆடைகள் ஏற்றுமதி சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் எந்தக் குறையும் இல்லை. நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வரவுகள் வந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் 4-ம் இடம் பலமாக இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உதவி உண்டு. வியாபாரத்தில் தொழில் விரிவாக்கம் செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் திறமை நிர்வாகத்துக்கு தெரிய வரும். மாணவர்கள் எதிர்கால பணி வாய்ப்பு பற்றிய ஆலோசனை பெறுவர். செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இனிமையான செய்திப் பரிமாற்றங்கள் நடைபெறும். கணவன் – மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கட்டுக்குள் இருக்கும். தகவல் பரிமாற்றத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பாதை பிறக்கும். ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படும். அலுவலகத்திலும் கவனக்குறைவால் பிரச்னைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டு.
தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் 3-ம் இடம் பலமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும். மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி பெறுவர். எதிர்பாராத வாய்ப்புகள் வரும். திட்டங்கள் வெற்றிகரமாக மாற்றும். வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவி உறவுகள் பரஸ்பர அன்புடன் இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. சொந்தவீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம். சிலருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய பொறுப்புகளால் சங்கடம் வரும். சிந்தனைத் தடுமாற்றங்கள் அவ்வப்பொழுது ஏற்படும் கவனம் தேவை.
மகரம்

மகரம் ராசியினருக்கு இந்த வாரம் 2-ம் இடம் பலமாக இருப்பதால் சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல் விலகி பெருமூச்சு விடுவர். மாணவர்கள் வெளியூர் தொழில்நுட்ப அரங்குகளில் கலந்து கொள்வர். தற்காலிக வேலையில் உள்ளவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். காரியங்களில் இருந்த தடைகள் விலகும். திருமணமாகி குழந்தைச் செல்வத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம். சிலருக்கு புதிய முன்னேற்றமும், புகழும், புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணவரவும் கிடைக்கும். சுயதொழில் முயற்சிகள் பலிக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதமும் தடைகளும் ஏற்படும்.
கும்பம்

கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் ராசி பலமாக இருப்பதால் சமூகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவு பெற்று மகிழ்வர். மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகும். ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகள் மறைமுகமாக உதவுவார்கள். பெரியோர்கள் மற்றும் தெய்வத்தின் ஆசி துணையாக நின்று சிக்கல்களில் இருந்து விடுவிக்கும். சிலருக்கு அவர்களின் அலட்சியமும் தாமதமும் பல பிரச்னைகளுக்குக் காரணமாகும். எதிர்மறை சிந்தனைகள் வேண்டாம். அலைச்சலும் எரிச்சலும் காரியத் தடைகளைத் தரும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டு. கணவன் மனைவி உறவுகள் சற்று கடினமாகவே இருக்கும்.
மீனம்

மீனம் ராசியினருக்கு இந்த வாரம் 12-ம் இடம் பலமாக இருப்பதால் வீடு-மனை பராமரிப்பு செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஆர்டர் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணியிட மாற்றமுண்டு. மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி பெறுவர். வேலையைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சிலர் சொந்தத் தொழிலுக்கு மாறுவார்கள். சிலருக்கு குடும்ப உறவுகளிடையே சங்கடங்களும் சச்சரவுகளும் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் மற்றும் பத்திரப் பதிவுகளில் மிகுந்த கவனம் தேவை.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!!


