சனிபகவான் தற்போது கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் நவம்பர் 15ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவார் எனவே இந்த தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் ஆனாலும் கூட ஒரு சில ராசிக்காரர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு வரப்பிரசாதமாக அமையும். அவர்களுக்கு பல்வேறு முன்னேற்றங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது அந்த அதிர்ஷ்டமான சில ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் பொன்னான நாட்கள் அமையப் போகிறது. வணிகத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மக்களுடைய ஆதரவையும் பெறுவீர்கள் வியாபாரத்தில் நீங்கள் தொடங்கும். திட்டங்களும் முயற்சிகளும் வெற்றி அடையும் அதன் மூலம் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர நிவர்த்தியால் உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். தொழில் நன்றாக விரிவடையும் தொழில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மேலும் இது உங்களுக்கு ஒரு பொன்னான நேரம் ஆக அமையும் பொருளாதார ஆதாயங்களால் உங்களுடைய பண வரவு அதிகரிக்கும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் நிறைய ஆதரவும் ஆதாயமும் கிடைக்கும்.
மிதுன ராசி

இது ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்கிர நிவர்த்தி பலவிதமான நன்மைகளை கொடுக்கும். தைரியத்தையும் வீரத்தையும் கொடுக்கும். அனைத்து சவால்களையும் தைரியமாக கையாளுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சமூகத்தில் மதிப்பு மரியாதையும் கூடும்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தை சேர்ந்தவர்களுக்கு பொருளாதாரத்தில் நிதி ஆதாயம் கிடைக்கும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மேலும் பலருடைய ஆதரவு கிடைக்கும்
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் தாக்கத்தால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் நடக்கும். வெளிநாட்டில் வணிகம் செய்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் அமைந்து கொண்டே இருக்கும். கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு பணவரவு அதிகரிக்கும். திடீர் பணவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவானுடைய ஆசிர்வாதத்தால் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். நிலை பார்க்கும் இடத்தில் பெரிய பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களின் பண பற்றாக்குறைய நீங்கி சனி பகவானின் அருளால் வங்கியில் பணம் அதிகமாக சேரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் மேலும் இந்த காலகட்டத்தில் உங்களுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் வேலை பார்க்கும் அனைத்து துறைகளிலும் வெற்றியை பெறுவார்கள். நவம்பர் 15ஆம் தேதி முதல் உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டும். காலகட்டத்தில் உங்களுடைய பொருளாதார நிலை மேலும் அதிகரிக்கும். புதிய வேலையும் உங்களுக்கு கிடைக்கும் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : கார்த்திகையில் புத-ஆதித்ய யோகம் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் இவர்கள் தான்!!


