நம் முன்னோர்களின் மருத்துவ குறிப்புகள்…தினம் 10 குறிப்புகள்.. PART – 4

- Advertisement -

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

கக்குவான் இருமல் குணமாக :-

- Advertisement -

நாயுறுவி கதிர், ஒரு சீகக்காய், ஒரு மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதிக்கவிடவும்.
பின்பு இறக்கி வைத்துக் கொள்ளவும் காலை மாலை அரை டம்ளர் குடிடுக்க கக்குவான் இருமல் குணமாகும்.

ரத்தம் உறைதல் குணமாக :-

நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலமாக இரத்தம் உறையாமல் இருக்கும் பிரச்சனை சரியாகிவிடும்.

-விளம்பரம்-

சொரி சிரங்கு குணமாக :-

கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகி வரும்.

சளி மூக்கடைப்பு தீர :-

-விளம்பரம்-

கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி மூக்கடைப்பு நோய்கள் குணமாகும்.

தலைவலி குணமாக :-

குப்பைமேனி கீரையின் சாறு எடுத்து அதை தலையில் தடவி வந்தால் தலைவலி முற்றிலும் குணமாகும்.

இரத்த கொதிப்பு குணமாக :-

அகத்திக் கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர ரத்த கொதிப்பு ஏற்படாது.

தீப்புண் ஆற :-

வேப்பம் கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் உள்ள இடங்களில் பூசினால் விரைவில் தீப்புண் ஆறிவிடும்.

கண்வலி வராமல் தடுக்க :-

எல் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கிட வேண்டும் எத்தனை பூக்கள் விளங்குகிறோமோ அத்தனை வருடம் கண்களில் வராது.

தொண்டை கரகரப்பு தீர :-

பூவரசன் வேர், பட்டை கசாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணிகள் முற்றிலும் அகலும்.

குடல் புண் குணமாக :-

மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

கால் பித்த வெடிப்பு :-

அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவி வர காலில் உள்ள பித்தவெடி விரைவில் குணமாகும்.

பெரும்பாடு நீங்க :-

வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு கட்டுப்படுத்தும்.

ஆண்களுக்கு :-

முருங்கை பூவை பசும்பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும்.

பல் வலி, கூச்சம் குணமாக :-

துத்து இலை அதன் வேரையும் கசாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி பல் கூச்சம் பல் ஆட்டம் அனைத்தும் குணமாகும்.

ரத்தம் சுத்தமாக :-

தினசரி இழந்தை பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மேலும் பசி உணர்வை தூண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here