நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.
பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக :-
ஆலமரத்து பட்டையே பட்டு போல் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அதை வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து மூன்று மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும் பல்லாட்டம், ஈறுகள் தேய்மானம் தீரும், பல் கூச்சம், வாய் நாற்றமும் விலகும்.
தொழுநோய் குணமாக :-
கடுக்காய் வேர், பட்ட இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை அரை கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.
சதை போடுவது குறைக்க :-
வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, மற்றும் அருகம்புல் சாறு மூன்றில் ஏதாவது ஒரு சாறை குடித்து வர உடலில் சதை போடுவது குறைந்து உடல் பெருக்கவும் குறைந்து உடல் அழகு பெறும்.
தூக்கம் வர :-
வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை ஒரு சொட்டு கண்ணில் விட்டால் போதும் தூக்கம் தானாக வரும்.
உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற :-
உடலில் கெட்டநீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளி காயை சாப்பிட்டு வர கெட்ட நீர் சிறுநீரின் வழியாகவும் வேர்வையின் வழியாகவும் வெளியேறும்.
கண்கள் குளிர்ச்சி பெற :-
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காய வைத்து பவுடர் ஆக்கி பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள் தினசரி 10 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை சக்தி அதிகரிக்கும் கண்குளிர்ச்சி பெறும்,
சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
வாந்தியை நிறுத்த :-
துளசி சாறு எடுத்து கல்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
பித்த வந்தியை நிறுத்த :-
வேப்பம்பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
வயிற்று கடுப்பு நீங்க :-
அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து அல்லது மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மந்தம் மற்றும் அஜீரணம் குணமாக :-
கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு சேர்த்து பொடியாக்கி கலந்து கொள்ளவும். பின் சோற்றுடன் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீக்கும் மலக்கட்டும் நீங்கும்.