நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.
சிறுநீர் எரிச்சல் குணமாக :-
அண்ணாச்சி பல சாறு தினசரி சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல் விரைவில் குணமாகும்.
வாய் நாற்றம் போக :-
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் இந்த தண்ணீரால் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் தீரும்.
சர்க்கரை வியாதி நீங்க :-
கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டு வர சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
தோல் வளம் பெற :-
ஆலமரத்து பட்டைகளை பட்டு போல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் ஒரு முறை பருகி வந்தால் சரும நோய் வராது தோல் வளமையாகும்.
வறட்டு இருமல் தனிய :-
எலுமிச்சை பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
கருப்பை கோளாறு நீங்க :-
அரசஇலை கொழுந்தை 10 லிருந்து 20 எடுத்து அரைத்து மோருடன் கலந்து பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.
மாதவிடாய் வயிற்று வலி தீர :-
அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட பெரும்பாடு குறையும்.
குடல்புண் குணமாக :-
மஞ்சள் வறுத்து கரியானவுடன் பொடியாக்கி இந்த பொடிய சாப்பிட்டு வர குடல் புண் எதுவாக இருந்தாலும் விரைவில் குனமாகும்.
காது குடைச்சல் குணமாக :-
ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும்.
வாய்ப்புண் குணமாக :-
மாசிக்காயே நன்றாக தூள் செய்து இரண்டு சிட்டிகை ஒரு வேலைக்கு வீதம் நெய் அல்லது வெண்ணையுடன் சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் குடல் புண் இரண்டுமே குணமாகும்.