நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து கொள்ளலாம். நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.
பித்தத்தை தவிர்க்க
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒரு விளாம்பழம் சாப்பிட்டு வர பித்தத்தை இது குறைக்கும்.
குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க
தினசரி இரண்டு பேரீச்சபழம் சாப்பிட்டு அதன்பின் பால் சாப்பிட்டால் குளுக்கோஸ் நேரடியாக நம் உடலுக்குள் சேருகிறது.
கல்லீரல் பலப்படுத்த
தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பல பலம் அடையும். விட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற இரும்பு சத்துக்கள் கொய்யாப்பழத்தில் உள்ளது.
உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்கள்
உடல் நலம் குன்றியவர்களின் தோல் நிறம் மாறியிருக்கும் மீண்டும் நிறம் பெற அத்திப்பழம் சாப்பிட வேண்டும் இழந்த இயற்கை நிறத்தை பெற அத்திப்பழம் உதவியாக இருக்கும்.
இதயத்திற்கு பலம் கிடைக்க
மாதுளை பழ சாறுடன் தேன் கலந்து சாப்பிட இதயம் வலுவடைகிறது மேலும் ஜீரண சக்தியையும் இது அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் சரியாக
டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சரியாகிவிடும்.
சோகையை நீக்க
குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி கொண்டு வந்து மண்ணில்லாமல் கழுவி நிழலில் உலர்த்தி எடுங்கள், பின்பு 24 மணி நேரம் வெயிலிலும் உலர்த்திக் கொள்ளுங்கள், பின்பு இடித்து பொடி செய்த 100 கிராம், மிளகு 10 கிராம் சேர்த்து சேர்த்து கண்ணாடி போட்டியில் வைக்கவும் மூன்று மாதங்கள் 1/2 ஸ்பூன் அளவு காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வரவும் சோகையை நீங்கி இரத்தம் பெருகும்.
குழந்தைகளுக்கு மந்தம்
கருவேப்பிலை, மிளகு சேர்த்து நெயில் வறுத்து சுடுதண்ணீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்து வந்தால் மந்தம் குறையும் மேலும் நன்றாக பசியும் எடுக்கும்.
குழந்தைகளுக்கு வாய்ப்புண்
குழந்தைகளுக்கு வாய்ப்புண் இருந்தால் சரியாக பால் குடிக்க முடியாமல் அழுது கொண்டே இருக்கும். இதற்கு சிறிது பாலில் மாசிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேனையும் கலந்து நாக்கில் தடவ குணமாகும்.
குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு
முருங்கை இலையை கசக்கி அதிலிருந்து சாறு எடுத்து அதை சூடாக்கி அரை சங்கு ஊற்றவும் வயிற்று உப்பிசம் மற்றும் மலக்கட்டு நீங்கும்.