நம் முன்னோர்களின் மருத்துவ குறிப்புகள்…தினம் 10 குறிப்புகள்.. PART – 2

- Advertisement -

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி வாழ்வில் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

சிலந்தி கடிக்கு மருந்து :-

- Advertisement -

தும்ப இலை எல்லா விஷக்கடிகளுக்கும் சிறந்த மருந்தாகும். சிலந்தி கிடைக்கும் தும்ப இலையின் சாறு சாப்பிட்டால் சிலந்தி கடிக்கு மருந்தாக பயன்படும்.

சீதபேதி குணமாக :-

புளியங்கட்டை தோல், மாதுளம் பழம் தோல் சம அளவு எடுத்து க்கொண்டு. காய வைத்து பொடியாக்கி தூள் செய்து பசும்பாலில் கலந்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

-விளம்பரம்-

வயிற்று நோய் குணமாக :-

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய் குணமாகும்.

காது வலி குணமாக :-

-விளம்பரம்-

வெற்றிலை எடுத்து அதை அரைத்துக் சாறு எடுத்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.

நுரையீரல் குணமாக :-

நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து பின்பு சலித்து பாட்டிலில் வைத்து.தினசரி காலை, மாலை இருவேளை 10 மில்லி பசும்பாலில் கலந்து சாப்பிட்டவரை நுரையீரல் நோய்கள் குணமாகும்.

காலரா குணமாக :-

மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும் மற்றும் காலராவும் குணமாகும்.

வாத நோய் குணமாக :-

குப்பைமேனி இலையை அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் வாதநோயும் குணமாகிவிடும்.

மலச்சிக்கல் சரியாக :-

அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி அந்த கீரையை பொடி செய்து காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முற்றிலுமாக குணமாகும்.

மேகரோகம் குணமாக :-

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டியும் உடன் சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரிழிவு நோய் குணமாக :-

மா மரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடி ஆக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here