அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழலில் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். அப்படி கடன் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் போராடுவார்கள். கடன் சுமையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் முருகப்பெருமானின் அருளை நாம் பரிபூரணமாக பெற வேண்டும். மேலும் செவ்வாய் பகவானுடைய அருளும் கிடைக்க வேண்டும். முருகப்பெருமானும் சிவபெருமானும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் இருவருமே ஒருவர்தான்.

இருளை நீக்கும் முருகப்பெருமாள்
முருகப்பெருமானே வந்து உங்களுக்கு இன்று வாக்கு கொடுத்ததாக நினைத்து இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி பிரகாசமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களுக்கும் தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் நீங்கி கடன் பிரச்சனைகள் நீங்கி நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள். கடன் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க கடன் இல்லாத நல்ல வாழ்க்கையை வாழ இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்யும் முறை
செவ்வாய்க்கிழமை அன்று உறங்க செல்வதற்கு முன்பாக முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் மேலும் செவ்வாய் பகவானுக்கு உரிய துவரம் பருப்பை கையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இந்த கீழ்க்கண்ட சித்தரின் மந்திரத்தை 27 முறை உச்சரித்துவிட்டு துவரம் பருப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு தூங்கப் போக வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அந்த துவரம் பருப்பை காகம் குருவிகள் போன்றவற்றிற்கு இணையாக போட வேண்டும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக உங்களுடைய பல பிரச்சனைகள் தீரும்.
சித்தர் மந்திரம்
ஓம் சிவாய சுந்திராநந்தர் சித்தரே நமஹ
சுந்திராநந்தர் சித்தர் 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். இவர் மதுரையில் வாழ்ந்தவர் சட்டை முனி நாத சித்தரின் சீடராக இருந்தவர் இவரையும் சிவபெருமானுடைய ஸ்வரூபமாக காண்கின்றோம். முருகப்பெருமானின் வாக்குப்படி இந்த சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு தூங்கு சென்றால் சித்தரின் தரிசனம் கிடைக்கும் இந்த சித்தர் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானின் ரூபம் தான். எனவே உங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த சித்தர் வழிபாட்டை நிச்சயமாக செய்து பாருங்கள் ஆத்மார்த்தமாக சித்தரை அழைத்தால் உங்கள் வாழ்க்கைக்கு நிச்சயமாக நல்லதொரு வழியை காட்டுவார்.
இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் அதிகமாக சில காரணங்கள்!


