சிக்கன் எடுத்தா இந்த மாதிரி ஒரு தடவை கோழி பிரட்டல் ரெசிபி செஞ்சு பாருங்க!!

- Advertisement -

என்னதான் நிறைய அசைவ உணவுகள் இருந்தாலும் எல்லாருக்குமே சிக்கன் ரெசிபி தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சிக்கன் எடுத்தா வீட்ல சிக்கன் பிரியாணி, சிக்கன் தொக்கு, சிக்கன் கிரேவி, சிக்கன் கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில இந்த கோழி பிரட்டலும் ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும். இந்த கோழி பிரட்டல் ரெசிபி தயிர் சாதம் ரசம் சாதம் தக்காளி சாதம், சாம்பார் சாதம் எல்லாத்துக்கும் ஒரு பர்ஃபெக்ட்டான காம்பினேஷனா இருக்கும்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாம சுட சுட சாதம் போட்டு அதில் இந்த கோழி பிரட்டல் போட்டு பிசைந்து சாப்பிடலாம். வீட்டுக்கு யாராவது சட்டுன்னு விருந்தாளிகள் வந்துட்டாங்கன்னா அவங்களுக்கு இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப ஈஸியா செஞ்சு கொடுத்துடலாம் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான கோழி பிரட்டல் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு நம்ம நிறைய பெரிய வெங்காயம் சேர்க்கணும் பெரிய வெங்காயம் நல்லா பொன்னிறமா வதங்குனாதான் இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.

- Advertisement -

கடைசியா சோம்பும் மிளகும் சேர்த்து அரைத்து இந்த ரெசிபில சேர்த்து விட்டால் சுவை அட்டகாசமா இருக்கும் வாசனையாகவும் இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு கூட இந்த ரெசிபியை வைத்து சாப்பிடலாம். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் மிஸ் பண்ணாம ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. நீங்க எவ்வளவு சிக்கன் ரெசிப்பீஸ் செஞ்சி இருந்தாலும் இந்த ரெசிபி ரொம்பவே வித்தியாசமா டேஸ்டா இருக்கும்.

இதுக்கு நிறைய பொருட்கள் சேர்க்க தேவையில்லை நம்ம வீட்ல இருக்கக்கூடிய மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்தாலே போதுமானது. அவ்ளோ டேஸ்டா இருக்கும் சிக்கன் வாங்கிட்டு சிக்கன் மசாலா இல்லனா கவலையே படாதீங்க இந்த மாதிரி மசாலாக்கள் சேர்த்து ஒரு சூப்பரான கோழி பிரட்டல் ரெசிபி செஞ்சிடுங்க. வீட்ல இருக்குற எல்லாருக்குமே இந்த ரெசிபி ஃபேவரட்டா மாறிடும். இப்ப வாங்க இந்த சுவையான கோழி பிரட்டல் ரெசிபி எப்படி செய்வது பார்க்கலாம்.

Print
No ratings yet

கோழி பிரட்டல் | Chicken Pirattal Recipe In Tamil

என்னதான் நிறைய அசைவ உணவுகள் இருந்தாலும் எல்லாருக்குமே சிக்கன் ரெசிபி தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சிக்கன் எடுத்தா வீட்ல சிக்கன் பிரியாணி, சிக்கன் தொக்கு, சிக்கன் கிரேவி, சிக்கன் கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில இந்த கோழி பிரட்டலும் ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும். இந்த கோழி பிரட்டல் ரெசிபி தயிர் சாதம் ரசம் சாதம் தக்காளி சாதம், சாம்பார் சாதம் எல்லாத்துக்கும் ஒரு பர்ஃபெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். அதுமட்டுமில்லாம சுட சுட சாதம் போட்டு அதில் இந்த கோழி பிரட்டல் போட்டு பிசைந்து சாப்பிடலாம். வீட்டுக்கு யாராவது சட்டுன்னு விருந்தாளிகள் வந்துட்டாங்கன்னா அவங்களுக்கு இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப ஈஸியா செஞ்சு கொடுத்துடலாம் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான கோழி பிரட்டல் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Chicken Pirattal
Yield: 4 People
Calories: 128kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கப் தயிர்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • சிக்கனை கழுவி சுத்தம் செய்து தயிர் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தட்டிய பூண்டு இஞ்சி சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • கருவேப்பிலை நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி சேர்த்து மசிய வதங்கியதும் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  • சிக்கன் நன்றாக வெந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, மிளகு சேர்த்து அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
  • ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான கோழி பிரட்டல் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 128kcal | Carbohydrates: 2.7g | Protein: 26g | Fat: 5.2g | Sodium: 133mg | Potassium: 124mg | Vitamin A: 82IU | Vitamin C: 144mg | Calcium: 21mg | Iron: 19mg

இதனையும் படியுங்கள் : ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!!

-விளம்பரம்-