எப்பவுமே பிரேக்ஃபாஸ்ட்க்கு ஒரே மாதிரியா இட்லி தோசை அப்படின்னு செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை கார்லிக் பராதா செஞ்சு பாருங்க. இதை கோதுமை மாவில் செய்ய போறதால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது. இந்த கார்லிக் பராதா செய்வதற்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். ஒரு சூப்பரான ரெசிபி தயாராகிவிடும் இதுக்கு சைடிஸ் கூட தேவை இல்லை நல்லா ஃப்ளேவரா சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். அது மட்டும் இல்லாம உங்களுக்கு சைடிஸ் தேவைப்பட்டால் தேங்காய் சட்னி தக்காளி சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இதுல பட்டர் சேர்க்கறதால டேஸ்ட் ரொம்பவே ரிச்சா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்க. ஒரு சிலர் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்திருப்பாங்க ஆனா ஒரு சிலர் சுத்தமா இது என்னனே தெரியாம இருப்பாங்க. அவங்க எல்லாரும் இதே செய்முறையில் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா ஒரு பெர்ஃபெக்ட்டான ரெசிபி உங்களுக்கு கிடைக்கும்.
கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியாக இருக்கும் எப்பவுமே ஒரே மாதிரியா சாப்பிட்டு சாப்பிட்டு போரடிச்சு போயிருக்கும் அந்த நேரத்துல இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. கோதுமை தோசை சாப்பிட்டு பிடிக்காதவங்க கூட இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க இதுல பூண்டு சேர்த்து இருக்கிறதால வாசனை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பாக வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான கார்லிக் பராதா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கார்லிக் பராதா | Garlic Paratha Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 10 பல் பூண்டு
- 1 கப் கோதுமை மாவு
- 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
- 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு துருவிய பூண்டு கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பட்டரை உருக்கி சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியான தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- பிறகு தோசை கல்லில் ஒரு கரண்டி மாவு சேர்த்து தேய்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கார்லிக் பராதா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கிரீமி கார்லிக் மஸ்ரூம் ரெசிபி ஒரு தடவை கிரீம் இல்லாம இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!