பொதுவா வீட்ல மட்டன் சிக்கன் அப்படின்னு எடுத்தா அதுக்கு வெங்காயம் உரிக்கணும் பூண்டு உரிக்கணும் மசாலாக்கு பொருட்கள் தயார் செய்யனும் அப்படின்னு ஒரே தடபுடலா இருக்கும். நான்வெஜ் எடுத்தாலே வீட்டுல நிறைய வேலை இருக்கும் அப்படின்னு ஒரு பக்கம் கவலையா இருக்கும் என்னதான் நம்மளுக்கு புடிச்ச மாதிரி நான்வெஜ் சாப்பிட போறோம் அப்படின்னு ஜாலியா இருந்தாலும் அதுக்கு பாக்குற வேல நிறைய இருக்கும். இனிமேல் அந்த மாதிரி சிரமப்படத் தேவையில்லை. உங்களுக்கு வேலை செய்வதற்கு ரொம்ப சிரமமா சலிப்பா இருந்துச்சுன்னா இப்ப சொல்ற மாதிரி இந்த சிம்பிளான மட்டன் ப்ரை செஞ்சுட்டு ரசம் வச்சிடுங்க உங்களோட லஞ்ச் சூப்பரா தயார் ஆகிடும்.
சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். ருசியான சாப்பாடு சாப்பிடணும் அப்படின்னா நம்ம எவ்வளவு மசாலா பொருட்கள் சேர்க்கிறோம் அப்படின்றது அவசியம் கிடையாது எவ்வளவு சுவையா செய்றோம் அப்படின்றது தான் முக்கியம். அந்த வகையில் இந்த சூப்பரான மட்டன் ஃப்ரை செய்றதுக்கு சிம்பிளா இருந்தாலும் சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். இந்த மட்டன் பிரை செய்வதற்கு நமக்கு நல்ல தரமான மட்டன் மசாலா இருந்தா மட்டும் போதுமானது. கடைகளில் விற்கக்கூடிய உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு மட்டன் மசாலா பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்பட்டதா பார்த்து வாங்கிக்கோங்க.
அந்த ஒரு பொடி மட்டும் இந்த ஃப்ரை செய்றதுக்கு போதுமானது. பெருசா வெங்காயம் தக்காளி வதக்கி அரைச்சு மட்டன் குழம்பு வைக்கவேண்டும் அப்படின்ற அவசியம் கிடையாது. இந்த ஒரு பொடி போட்டாலே மட்டன் ஃப்ரை சூப்பரா வரும். அத அப்படியே சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சும் சாப்பிடலாம் இல்லனா ரசம் சாதத்துக்கு சைடு டிஷ் ஆகவும் வச்சுக்கலாம். தயிர் சாதத்துக்கும் இந்த ஒரு மட்டன் ஃப்ரை செம காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான மட்டன் ஃப்ரை சிம்பிளா ருசியா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மட்டன் ஃப்ரை | Mutton Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/2 கி மட்டன்
- 2 டேபிள் ஸ்பூன் மட்டன் மசாலா
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு கழுவி வைத்துள்ள மட்டன் சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வதக்கவும்.
- பிறகு மட்டன் மசாலா உப்பு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் சேர்த்து கலந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு இறக்கவும்.
- மறுபடியும் குக்கரை அடுப்பில் வைத்து தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சுவையான மட்டன் ஃப்ரை தயார்.
செய்முறை குறிப்புகள்
Nutrition
இதனையும் படியுங்கள் : வார இறுதி நாட்களில் மட்டன் உப்பு கறி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!