ஒரு சிலருக்கு சிக்கனை விட நாட்டுக்கோழி தான் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு நாட்டு கோழி எடுத்து அதுல தண்ணி குழம்பு வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நாட்டுக்கோழி குழம்புல நல்லெண்ணெய் ஊத்தி குடிச்சா உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதுல குழம்பு வச்சு சாப்பிடுவதற்கும் கூட ரொம்ப ருசியாவே இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம நாட்டுக்கோழி வச்சு ஒரு சூப்பரான நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ரெசிபி செய்ய போறோம். இது கொங்கு நாட்டு பக்கம் ரொம்ப ரொம்ப பேமஸ்.
ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான இந்த நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ரெசிபியை கண்டிப்பாக வீட்ல செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் இது எல்லாத்துக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுடச்சுட சாதத்துலையும் போட்டு பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிள் ஆன ரெசிபி தான் அதனால சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் ரொம்ப சீக்கிரமாவே இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் விருந்தாளிகள் சாப்பிட்டுட்டு உங்களை பாராட்டிட்டு போவாங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டான ரெசிபி இது. குழந்தைகளிலிருந்து நாட்டு கோழியை எல்லாருமே சாப்பிடலாம் குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே கொடுத்து பழகணும். இந்த ரெசிபியை நல்லெண்ணெய் ஊத்தி செய்யும்போது வாசனை செம்மையா சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப் போறதால டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ரெசிபி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
நாட்டுக்கோழி பள்ளிபாளையம் | Pallipalayam Chicken Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கி நாட்டுக்கோழி
- 1/4 கப் தேங்காய் துண்டுகள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 14 சின்ன வெங்காயம்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 15 காய்ந்த மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- காய்ந்த மிளகாயில் விதை நீக்கி சேர்த்துக் கொள்ளவும். நாட்டுக்கோழியை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.
- நாட்டுக்கோழி நன்றாக வெந்ததும் கரம் மசாலா தேங்காய் துண்டுகள் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வதக்கி இறக்கினால் சுவையான நாட்டுக்கோழி பள்ளிபாளையம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் நாட்டுக்கோழி வாங்கி காரசாரமான ருசியில் நாட்டுகோழி கிரேவி இப்படி செஞ்சி பாருங்கள்! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!