- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
ரவை உப்புமா சேமியா உப்புமா கிச்சடி இதெல்லாம் செஞ்சிருப்பீங்க ஆனா இது என்ன ராகி உப்புமா அப்படின்னு யோசிக்கிறீங்களா ராகி மாவை புட்டு மாதிரி செஞ்சு அதுல உப்புமா செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். ராகி மாவு வச்சு கூழ் செஞ்சிருப்பீங்க ராகி மாவு புட்டு செஞ்சிருப்பீங்க ராகி கொழுக்கட்டை இதெல்லாம் செய்து இருப்பீங்க ஆனா இந்த உப்புமா ஒரு தடவை செஞ்சு பாருங்க சாப்பிட்டு அசந்து போயிடுவீங்க. அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் காலையில் பிரேக்ஃபாஸ்ட்க்கு ஒரு ஆரோக்கியமான ரெசிபி இது. ராகி மாவுல நிறைய கால்சியம் சத்துக்கள் நிறைந்திருக்க அதனால இது சாப்பிடறதால எலும்புகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது முக்கியமாக கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும் அதனால அடிக்கடி ராகி மாவை உணவில் சேர்த்துக்கோங்க.
ராகி மாவுல என்ன செஞ்சு சாப்பிடுறது அப்படின்னு ஒரே குழப்பமா இருந்துச்சுன்னா யோசிக்காம இந்த ராகி உப்புமா செஞ்சுருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும். இதுக்கு சைடிஷ் கூட தேவைப்படாது தேவைப்பட்டால் தேங்காய் சட்னி வச்சு சாப்பிடலாம் ஆனா பெரும்பாலும் சைடிஷ் விரும்ப மாட்டாங்க. இதுல நம்ம நிறைய பொருட்கள் சேர்த்து தாளிக்கிறதால அதுவே அவ்ளோ வாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். குழந்தைகளுக்கு காலைல பிரேக்ஃபாஸ்ட்க்கு எப்பவும் இட்லி தோசை சப்பாத்தி பூரி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை சுவையான ராகி உப்புமா செஞ்சு கொடுங்க. கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
சுவையான இந்த ராகி உப்புமா ரெசிப்பிய ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. பொதுவா ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அந்த வகையில் இந்த ராகி உப்புமா ரொம்ப ரொம்ப ஹெல்தியான ஒரு பிரேக்ஃபாஸ்ட் அப்படின்னு சொல்லலாம். நைட்டு டின்னருக்கு கூட சாப்பிடலாம் மாலை நேரத்தில் குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு அந்த டைம்ல பசிக்கும் அப்ப கூட நீங்க இதை செஞ்சு கொடுக்கலாம் இதை சாப்பிட்டு அடம் பிடிக்காமல் படிப்பாங்க. இந்த சுவையான ஆரோக்கியமான ராகி உப்புமா ரெசிப்பிய செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. இப்ப வாங்க இந்த ரெசிபி எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ராகி கார கொழுக்கட்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
கருவேப்பிலை சேர்த்து தாளித்ததும் பெரிய வெங்காயம் நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
உப்பு சேர்த்து வதக்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும் பிறகு வேக வைத்துள்ள ராகி மாவை சேர்த்து நன்றாக கலந்து இறுதியாக நெய் சேர்த்து இறக்கினால் சுவையான ராகி உப்புமா தயார்.






