குரு பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வு. சுப கிரகமாக இருக்கக்கூடிய குரு பகவான் ரிஷப ராசியில் தற்போது உள்ளார் மே மாதம் அவர் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார் அதற்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கப் போகின்ற குரு வக்ர நிவர்த்தி மற்றும் மே மாதம் நடக்க போகும் குரு பெயர்ச்சி போன்றவற்றின் தாக்கத்தால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும் அந்த அதிர்ஷ்டமான ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான பலன்களை அளிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் பல நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணத்திற்காக காத்திருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கம் பணியிடத்தில் பாராட்டுகளையும் மரியாதையையும் அதிகரிக்கச் செய்யும். மூத்த அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும் உடல்நலம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் பல நல்ல செய்திகள் கிட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு எப்பொழுதுமே வலுவாக இருக்கும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் புத்தாண்டு மங்களகரமானதாகவும் அற்புதமான பலன்களை அளிக்கக்கூடிய ஆண்டாகவும் இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெளி பார்க்கக்கூடிய இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிகப்படியான நன்மைகளை கொடுக்கும். துலாம் ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டத்துடன் இருப்பார்கள். குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக அமையும். வெளி பார்க்கக்கூடிய இடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் கணவன் மனைவிக்கு இடையே அன்பும் புரிதலும் அதிகமாகும்.
இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டில் சனி புதன் இணைவால் இனி அமர்க்களமாக இருக்க போகும் ராசிகள் இவை தான்!!


