ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதேபோல் மார்கழி மாதத்திற்கு என்று தனி ஒரு சிறப்பே உள்ளது. தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதம் என்று மார்கழி மாதத்தை சொல்லலாம் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று 14 வகையான செல்வங்களும் ஐஸ்வர்யமும் பெருகுவதற்கு தினமும் மார்கழி மாதத்தில் சொல்ல வேண்டிய வார்த்தைகளை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தகவல் பார்க்கலாம்.
மார்கழி மாத தீபம்

மார்கழி மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று தீபம் போட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்று சொல்வார்கள். ஆன்மீக ரீதியாக பல காரணங்களும் உண்டு. ஆனால் பிரம முகூர்த்தத்தில் எழுவது உடலுக்கும் சிறந்தது ஐஸ்வர்யத்தை பெறக்கூடிய மாதமாக இருக்கக்கூடிய இந்த மார்கழி மாதத்தில் நாம் தெய்வ வழிபாடு என்று பல விஷயங்களை செய்யலாம்.
நேர்மறையான வார்த்தைகள்
நாம் பேசக்கூடிய அனைத்து வார்த்தைகளிலும் நேர்மறை ஆற்றல்களும் எதிர்மறை ஆற்றல்களும் கலந்து உள்ளது எனவே எதிர்மறையாக நாம் பேசினால் எதிர்மறையான காரியங்கள் நடைபெறலாம். எனவே நேர்மறையான சில விஷயங்களை மட்டுமே நாம் பேச வேண்டும். நேர்மறையான வார்த்தைகளை கூறும் போது அது நமக்கு அப்படியே நடக்கும். நம்மை சுற்றி எப்பொழுதுமே தேவதைகள் உலாவிக்கொண்டே இருப்பார்களாம். எனவே ‘சதாப்து’ என்று நாம் கூறும்போது அந்த வார்த்தை நமக்கு அப்படியே நடந்து விடும் என்று கூறப்படுகிறது. இதே போல் இரவு தூங்கும் போதும் காலை எழுந்தவுடனும் சொல்வதற்கு நிறைய வார்த்தைகள் உள்ளது.
காலை எழுந்ததும் கூற வேண்டிய வார்த்தை
மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்த பிறகு ஒரு டம்ளர் தண்ணீரை வாயில் வைத்து இந்த ஒரு மந்திரத்தை உச்சரிக்கலாம். அந்த வார்த்தைகளை வாயில் தண்ணீரை வைத்துக் கொண்டே உச்சரித்துவிட்டு பிறகு குடித்து விடலாம்.
மந்திரம்
“தனம் அகம் பிரப்பியாமி”இதற்கு செல்வங்களையும் வளங்களையும் ஈர்க்கிறேன் என்று பொருள்படும்.
இரவு கூற வேண்டிய வார்த்தை
இரவு நேரத்திலும் அதே போல் பல் துலக்கி விட்டு வாயில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு இந்த கீழ்கண்ட மந்திரத்தை கூற வேண்டும் பிறகு தண்ணீரை குடித்து விடலாம்.
மந்திரம்
“ஆண்டாளின் அன்பு என்னை சூழ்ந்து என் செல்வத்தையும் ஆசிர்வாதங்களையும் தினமும் பெருகுகிறது”
இதனை இரவு படுக்க செல்வதற்கு முன்பு கூறிவிட்டு செல்லலாம் இந்த தண்ணீரை வாயில் வைத்துக் கொண்டே மந்திரத்தை உச்சரித்துவிட்டு பிறகு குடிப்பது நேர்மறையான ஆற்றல்களை அதிகரித்த ஐஸ்வர்யம் பெருக உதவும்.
இதனையும் படியுங்கள் : தெரியாமல் கூட மார்கழி மாதத்தில் இதை செய்யாதீர்கள்!


