மேஷம்

இந்த வாரம் வருகின்ற பிரச்சனைகளை நிதானமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வார்கள். கொடுக்கல் வாங்கலில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அனாவசியமாக கடன் வாங்காதீர்கள். எதிர்பார்த்த அளவு பண வரவு இருக்காது. மேலும் அத்தியாவசிய செலவுகள் வந்து கையை கடிக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் துணிந்து ஈடுபடலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்

இந்த வாரம் வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்புவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களை நம்பி முதலீடு செய்ய நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். காதலர்கள் சில புரியாத்தனங்களால் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்வர். போட்டி பந்தயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சலை அதிகப்படுத்தும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும்.
மிதுனம்

இந்த வாரம் புதிய முதலீடுகளில் அதிக அக்கறை காட்டுவீர்கள். செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார வரவு அதிகரிக்கும். வியாபாரிகள் வெற்றிகரமாக வியாபாரத்தை நடத்தி பணவரவை பெருக்குவார்கள். வெளியூர் பயணம் செல்லும் நபர்கள் நல்ல பலனை காண்பார்கள். வார மத்தியில் சிலருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கடகம்

இந்த வாரம் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் எதிர்பார்த்த இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் தோன்றும். ஆனால் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குடும்பச் சொத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்க்க கோர்ட் படிக்கட்டு ஏறுவீர்கள். தெரியாத தொழிலில் அதிகமான முதலீடு செய்ய வேண்டாம். வெளியூர் பயணங்களில் பணப் பையை பத்திரமாக வைத்திருங்கள்.
சிம்மம்

இந்த வாரம் தொழில் துறையில் குட்டி குட்டி பிரச்சனைகள் தோன்றி முட்டுக்கட்டை போடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிதானமாக நடந்து துணிச்சலோடு அதையெல்லாம் தாண்டி வருவீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. வியாபாரத்தில் நுணுக்கங்களை புகுத்துவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைந்து வாங்கிய கடனை அடைப்பார்கள். விவசாயத்தில் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கி சுமுக உறவு ஏற்படும்.
கன்னி

இந்த வாரம் மற்றவர்களுக்கு மனம் உவந்து உதவி செய்வீர்கள். ஆனால் அந்த நன்றியை அவர்கள் நினைக்க மாட்டார்கள். உங்களுக்குத்தான் கெடுதல் செய்ய நினைப்பார்கள். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தி உங்களின் நிம்மதியை கெடுக்க சூழ்ச்சிகளை பின்னுவார்கள். எச்சரிக்கையாக இருந்து அதை தாண்டி வருவது தான் உங்களுடைய சாமர்த்தியம். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
துலாம்

இந்த வாரம் எந்த காரியத்தையும் சொந்த புத்தியில் நடத்த முயற்சி செய்வீர்கள். அதனால் நொந்து நூலாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். நல்ல நண்பர்களின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அதிக ஆசைப்பட்டு புதிய முதலீடுகளில் இறங்க வேண்டாம். உங்களுக்கு எதிராக உள்ள தொழில் போட்டியாளர்களை சமாளிக்க சிரமப்பட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. அதையும் கவனத்தில் கொள்வது முக்கியமான காரியமாகும். வியாபரத்தை விரிவு படுத்துவதற்கான எண்ணம் இருந்தால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
விருச்சிகம்

இந்த வாரம் புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலமாக புதிய ஆர்டர்களை பெறுவதில் முயற்சி செய்வீர்கள். ஆனால் அதில் பலன் சற்று குறைவாகவே கிடைக்கும். சிலர் தொழில் காரணமாக வெளிநாடு செல்வார்கள். வெளிநாட்டிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கு தேவையான உதவிகளை அங்கு இருக்கிற நண்பர்கள் மேற்கொள்வார்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும்.
தனுசு

இந்த வாரம் மனைவியின் மனம் அறிந்து நடந்து கொள்ளுங்கள். அனாவசியமாக பேசி அவஸ்தையை வாங்கிக் கொள்ளாதீர்கள். உறவினர் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முக்கிய பங்கு அளிப்பீர்கள். அலுவலகத்திற்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஏழைப் பெண்ணுக்கு திருமணத்தில் உதவி செய்வீர்கள். வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி மிகவும் தாமதமாகவே கிடைக்கும். உங்களுக்கு உதவ தயாராக இருந்தவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு உதவ முடியாமல் போகலாம்.
மகரம்

இந்த வாரம் தனியார் துறை ஊழியர்கள் முதலாளிகளின் கவனத்தை கவருகின்ற வகையில் வேலை செய்ய வேண்டும். சிலர் வேலை இழக்கும் அபாயம் கூட உள்ளது. வருமானத்தைப் பெருக்கி மனை இடம் வாங்குவீர்கள். சில தொழில்களில் நீங்கள் ஒரு மடங்கு லாபத்தை எதிர்பார்ப்பீர்கள். பங்கு பரிவர்த்தனையில் அதிக முதலீடு செய்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் சிறப்பான லாபத்தை கொடுக்கும். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
கும்பம்

இந்த வாரம் பங்கு பரிவர்த்தனையில் நுணுக்கமாக முதலீடு செய்து அதிகமான லாபத்தை அள்ளுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. தொழில் துறையில் உங்களுக்கு எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி உங்களின் திறமையை பாராட்டுவார்கள். தந்தையார் வகையில் மருத்துவச் செலவு ஏற்படலாம். தாயார் வழியில் இருந்து பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
மீனம்

இந்த வாரம் நண்பரின் வீட்டில் உள்ள சிக்கலான பிரச்சனையை பேசி தீர்ப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். திடீர் வெளியூர் பயணங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீர்கள். வரவுக்கு மேல் செலவு வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களுக்கு உண்டு. கடன் வாங்குவீர்கள். ஆனால் அதை வீட்டுத் தேவைக்காக பயன்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலமாக சில அனுகூலமான பலனை பெறுவீர்கள்.தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம்.
இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டில் சனி புதன் இணைவால் இனி அமர்க்களமாக இருக்க போகும் ராசிகள் இவை தான்!!


