விநாயகரை முழு மனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான சங்கடங்களும் தீரும். வருமானத்தில் பிரச்சனை இருப்பவர்கள் பிள்ளையாரை பின்வரும் முறையில் வழிபாடு செய்தால் நிச்சயமாக வேலை வருமானத்தில் எந்த பிரச்சனையும் வராது. வேலையில்லாதவர்களுக்கு வேலையை வாங்கி கொடுக்கும் ஒரு அற்புதமான வழிபாடு இது 48 நாட்கள் தவறாமல் பிள்ளையாரை இந்த முறையில் வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் வழிபாட்டையும் மேற்கொள்வதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

இறைவனை அழைத்தல்
மனிதர்களாகவே இருந்தாலும் கூட ஒரு முறை அவர்கள் நம்மை திரும்பி பார்க்கவில்லை என்றால் மறுபடியும் கூப்பிடுவோம். அதேபோல் தான் இறைவனிடமும் ஒரே ஒரு முறை வேண்டுதல் வைத்துவிட்டு நடக்கவில்லை என்று இறைவனை மறுபடியும் கூப்பிடாமல் விடுவது தவறு. மறுபடியும் மறுபடியும் இறைவனை கூப்பிட வேண்டும் இறைவன் நம்மை திரும்பிப் பார்க்கும் வரையில் கூப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த கஷ்டத்திற்கு விடிவுகாலம் கிடைக்கும்.
வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர பிள்ளையார் வழிபாடு
தினமும் காலையில் பிள்ளையார் கோவிலுக்கு சென்று பிள்ளையாரை வழிபட்டுவிட்டு அனைத்து பிரச்சனைகளையும் சரி பிள்ளையாரப்பா என்று வழிபாடு செய்ய வேண்டும். மேலும் “ஓம் க்லீம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் 27 முறை சொல்லலாம் அதிகபட்சம் 108 முறையும் சொல்லலாம் அது அவரவர்களுடைய விருப்பம். இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தால் நிச்சயமாக பிள்ளையார் உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க தொடங்கி விடுவார்.
மந்திரத்தை மாற்றி அமைத்தல்
மேலும் இந்த மந்திரத்தில் உள்ள கணபதி என்ற பெயரை தூக்கிவிட்டு யார் ஒருவர் உங்களுடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுடைய பெயரை போட்டு இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் அந்த நபர் உங்களுக்கு வசியம் ஆகிவிடுவார்கள். தவறான விஷயங்களுக்காக இந்த மந்திரத்தை பயன்படுத்தக் கூடாது நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தலாம். உதாரணமாக கணவர் தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையானால் அவரை மாற்றுவதற்கு மனைவி இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறான பாதைக்காக இந்த மந்திரத்தை பயன்படுத்தினால் விநாயகர் நிச்சயமாக அதற்கு துணை நிற்க மாட்டார். அதனால் விநாயகருடைய இந்த மந்திரத்தை பயன்படுத்தும் போது தவறான விஷயத்திற்கு பயன்படுத்தக் கூடாது நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தி இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 48 நாட்கள் தொடர்ந்து இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
இதனையும் படியுங்கள் : நிம்மதியான வாழ்க்கையை தரக்கூடிய மந்திரம்!!


