ஜோதிடத்தில் ஒருவருக்கு பலம் ஆற்றல் உத்வேகம் அனைத்தையும் தரக்கூடியது செவ்வாய் பகவான் தான். தற்போது செவ்வாய் பகவான் கடக ராசியில் நீசநிலையில் உள்ளார். டிசம்பர் 7ஆம் தேதி வக்ர நிலையை அடையப் போகிறார் எனவே 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் பகவானின் பத்திரப் பெயர்ச்சி காரணமாக மனக்கட்டுப்பாடு குறையும். கோபம் அதிகரிக்கலாம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் பேசுவதிலும் கவனமாக இருக்க வேண்டும். கல்வித்துறையில் இருப்பவர்கள் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் என் வக்ர நிலையால் இனிமையான பல பலன்கள் கிடைக்கும். பேச்சில் எப்பொழுதுமே கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு மனம் அமைதியற்ற நிலையில் இருக்கும். அவர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டும். கடினமான நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் வேலையை முடிக்கவும் உத்தியோகத்தில் பதவி உயர்வை அடையவும் கடுமையாக உழைக்க வேண்டும்.
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்ர நிலையால் மனதில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். அன்னையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வாழ்க்கையில் குழப்பமான சூழலில் ஏற்பட்டால் அதனை சமாளிக்க வேண்டியது அவசியம். மேலும் வருமானமும் அதிகரிக்கும்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் இன்ப அக்கறை நிலை காரணமாக பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம். நம்பிக்கையோடு செயல்பட வேண்டும் கல்வி விஷயமாக அனைத்திலும் வெற்றியே கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் வியாபாரமும் அதிகரிக்கும்.
சிம்ம ராசி

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு மணமகிழ்ச்சி அதிகரிக்கும். படிப்பில் கவனம் ஆர்வம் அனைத்தும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடல் வேலை பார்ப்பவர்களுடைய ஆதரவு கிடைக்கும். உங்களுடைய செயலில் பல முன்னேற்றங்கள் அமையும் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் வக்கிரநிலையால் மனநிலை ஏற்றத்தாழ்வோடு இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். அறிவு சார்ந்த சில வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எதிர்பார்த்த வேளையில் முன்னேற்றம் கிடைக்கும் தந்தையின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும் வேலையில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் பொறுமையுடன் செயல்பட்டால் மன அமைதியை பெற முடியும். திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மிகவும் மோசமான சூழ்நிலையில் நண்பர்களுடைய ஆதரவை பெறுவீர்கள்.
விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்கிரநிலையால் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மன கலக்கம் ஏற்பட்டாலும் பொறுமையாக செயல்பட்டால் பிரச்சனை எதுவும் ஏற்படாது. வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெறுவீர்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் அதிக அலைச்சல் ஏற்படலாம்.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். செவ்வாயின் வக்கிரநிலையால் மனதில் சஞ்சலம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் ஆன்மீக சுற்றுலா செல்ல அதிகமான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வேலை தொடர்பாக அலைச்சல் ஏற்படும் தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
மகர ராசி

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு மணமகிழ்ச்சி அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் உங்களுடைய சிறப்பான சில செயல்பாடுகளால் வேலை பார்க்கும் இடத்திலும் குடும்பத்திலும் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். பெற்றோர்களின் பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
கும்ப ராசி

கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சில விஷயங்களால் விரத்தியான மன உணர்வு ஏற்படும். இந்த காலகட்டத்தில் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் நல்ல பெயரும் முன்னேற்றமும் கிடைக்கும். கல்வி தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும். அரசாங்கம் தொடர்பான வேலைகள் சிறப்பாகவே நிறைவேறும். தந்தையின் ஆதரவை பெற்று மகிழ்வீர்கள்.
மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் மாற்றத்தினால் மன அமைதி அதிகரிக்கும். எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கோபத்தையும் வாக்குவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் இனிமையை கடைபிடிக்க வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் இறுக்கமான சூழ்நிலை உருவாகும். சில பேருக்கு வெளியூர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.
இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்!


